search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அர்ச்சகர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா
    X

    அர்ச்சகர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா

    • அர்ச்சகர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
    • துளாவூர் ஆதீனம் ஞானப்பிரகாச தேசிக சுவாமிகளும் யாக பூஜையில் கலந்து கொண்டு பேசினார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புரவி திடலில் தமிழ் வேத ஆகம முறையில் வட்டார மக்கள் நல வேள்வி மற்றும் பூசாரி (அர்ச்சகர்) பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.

    இதில் மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு சேலம் சிம்மம் சத்யபாமா அம்மையார் தலைமையில் நடைபெற்ற யாக வேள்வியில் பங்கேற்று 100 பேருக்கு அர்ச்சகர் பயிற்சி சான்றிதழ்களை வழங்கி பேசினார். துளாவூர் ஆதீனம் ஞானப்பிரகாச தேசிக சுவாமிகளும் யாக பூஜையில் கலந்து கொண்டு பேசினார்.

    பேரூராட்சி தலைவர் கோகிலா ராணி நாராயணன், ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராமேசுவரன், பேராசிரியர் பாலசுப்பிரமணியன், கவுன்சிலர் சாந்தி சோமசுந்தரம், சங்கம் பாண்டியன், விஜயசேகரன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை அங்காள பரமேஸ்வரி கோவில் அறங்காவலர் ஓம் பிரகாஷ், புதுப்பட்டி அகத்தீஸ்வரர் ஆலய அறங்காவலர் பாண்டி , சத்தியபாமா அறக்கட்டளை நிர்வாகிகள், புதுப்பட்டி துரைப்பாண்டி, வேல்முருகன், மதி வதனன், திருப்பத்தூர் சித்தர் சிவரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×