search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்ணீர் விற்பனை மையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
    X

    தண்ணீர் விற்பனை செய்யும் மையத்தின் முன்பு பொதுமக்கள் திரண்டுநின்ற காட்சி.

    தண்ணீர் விற்பனை மையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

    • தேவகோட்டை அருகே தண்ணீர் விற்பனை மையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    • போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாழையூர் முத்து பெரியநாயகி நகரில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதி மக்களுக்கு அரசு சார்பில் குடிநீர் தேக்க தொட்டி அமைத்து வீடுகளுக்கு பைப் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

    சமீப காலமாக இந்த பைப்களில் தண்ணீர் வரத்து இல்லாததால் பெரியநாயகி நகரில் வீடுகளுக்கு குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதே பகுதியில் ஆரோக்கியம் என்பவர் தனது வீட்டில் அதிக திறன் கொண்ட போர்வெல் அமைத்து டேங்கர்கள் மூலம் தண்ணீர் விற்பனை செய்து வருகிறார்.

    இதனால் இவரது வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள நீர் தேக்க தொட்டி ஆழ்துளை கிணறுக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் மின்மோ ட்டார் அடிக்கடி பழுதாகி விடுகிறது.

    இதுகுறித்து ஆரோக்கி யத்திடம் பலமுறை அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் இனிமேல் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டு மீண்டும், மீண்டும் தண்ணீர் விற்ப னை செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெரியநாயகி நகர் பகுதி பொதுமக்கள் தண்ணீர் ஏற்றிக் கொண்டிருந்த டேங்கர் வாகனத்தை வழிமறித்து அங்கிருந்து செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனை அறிந்த ஆறாவயல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் மருது, மைக்கேல் ஆகியோர் இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது ஆரோக்கியம் நீண்ட நாட்களாக வியாபார நோக்கத்தில் தண்ணீர் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இனிமேல் தண்ணீர் விற்பனை செய்யக்கூடாது என்று அவரை போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×