search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அய்யனார் கோவில் திருவிழாவில் பக்தர்கள் வினோத வழிபாடு
    X

    அய்யனார் கோவில் திருவிழாவில் பக்தர்கள் வினோத வழிபாடு

    • அய்யனார் கோவில் திருவிழாவில் பக்தர்கள் வினோத வழிபாடு நடத்தினர்.
    • புரவி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காப்பாரப்பட்டியில் காப்பார அய்யனார் கோவில் உள்ளது. இங்கு கரடி கருப்பர் சுவாமி அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் வருடந்தோறும் திருவிழா விமரிசையாக நடைபெறும். அப்போது ஒரு சமுதாய மக்கள் விவசாயம் செழிக்க வேண்டியும், நோய் நொடியின்றி வாழவும், கரடி கருப்பர் சாமிக்கு பக்தர்கள் கரடி வேடத்தில் புரவிகள் எடுத்து வழிபாடுவார்கள்.

    அதன்படி இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கரடி அமைப்பில் மண்ணால் செய்யப்பட்ட புரவிகள் எடுத்து வினோத வழிபாடு நடத்தினர்.

    திருமணமான பெண்கள் குழந்தை வரம் வேண்டியும், குழந்தைகள் நோய் நொடி யின்றி வாழவும் மண்ணால் செய்யப்பட்ட குழந்தை பதுமைகளை தலையில் சுமந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    முன்னதாக சிங்கம்புணரி குலாலர் தெருவில் புரவிகளை செய்வதற்கு பிடிமண் கொடுத்து அவர்கள் செய்து வைத்திருந்த கரடி மற்றும் குழந்தை பதுமைகளை தலையில் சுமந்து கொண்டு சுமார் 5 கிலோ மீட்டர் தூரமுள்ள காப்பார அய்யனார் கோவிலுக்கு தோளிலும் தலையிலும் சுமந்து கொண்டு ஆட்டம் பாட்டத்துடன் கிராமிய சூழ்நிலையில் நேர்த்திக்கடன் செய்த காட்சிகள் மனதை கவரும் விதமாக அமைந்திருந்தது.

    Next Story
    ×