search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பக்தர்கள்  பால்குடம், தீச்சட்டி எடுத்து வழிபாடு
    X

    பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து வழிபாடு

    • திருப்பத்தூர் ராஜகாளியம்மன் கோவில் விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து வழிபாடு நடத்தினர்.
    • இளைஞர் குழுவினர் மற்றும் விழாக்கு ழுவினர் செய்திருந்தனர்

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஆலமரத்தடி காளியம்மன், ராஜ காளி யம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதத்தை முன்னிட்டு பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுக்கும் விழா நடைபெற்றது.

    விழாவையொட்டி காளியம்மனுக்கு திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், மதுக்குடம், காவடி, தீச்சட்டி சுமந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் வழிபாடு செய்தனர்.

    இந்த பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் ராமர் மடம், ஆதி திருத்தளிநாதர் ஆலயத்தில் இருந்து நான்குரோடு, பேருந்து நிலையம், செட்டியதெரு, காளியம்மன் கோவில் தெரு வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

    பின்பு அங்கு தீ மிதித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பால்குடத்துடனும், குழந்தைகளை சுமந்தபடியும் தீச்சட்டி ஏந்தியபடியும் அலகு குத்தியபடியும் கோவில் வாசல் முன்பு அமைக்கப்பட்டுள்ள பூக்குழியில் இறங்கி நேர்த்தி க்கடனை நிறைவேற்றினர்.

    பின்பு அம்மனுக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருப்பத்தூர் செட்டியதெரு இளைஞர் குழுவினர் மற்றும் விழாக்கு ழுவினர் செய்திருந்தனர்

    Next Story
    ×