search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கல்
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் ஆஷா அஜித் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அருகில் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, முருகேசன், செந்தில்நாதன் ஆகியோர் உள்ளனர்.

    நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கல்

    • சிவகங்கையில் ரூ.15.75 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • www.tnsevai.gov.in/Citizen Registration என்ற இணையதள முகவரியின் வாயிலாகவும் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    சிவகங்கை

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளி யில் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி, செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் 13 மாற்றுத்திற னாளிகளுக்கு தலா ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் வீதம் ரூ.13 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பீட்டிலும் மற்றும் 17 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.11 ஆயிரத்து 500 வீதம் ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15 லட்சத்து 73 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் உதவி உபகரணங்களும் வழங்கப் பட்டது. பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

    அடுத்த மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு முகாம் வருகிற செப்டம்பர் 20ந்தேதி தேவகோட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளி யில் நடைபெற உள்ளது.

    மாற்றுத்திறனாளி களுக்கான மருத்துவச் சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை, ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை ஆகிய அட்டை களை பெறுவதற்கு ஏதுவா கவும், மாற்றுத்திறனாளி களுக்கு சலுகைகள் சென்று சேருவதை உறுதி செய்யவும் இந்த முகாம்கள் நடத்தப் பட்டு வருகிறது.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை திட்டம், உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம், வங்கி கடனுதவிகள், திருமண உதவி திட்டம், மாதாந்திர பராமரிப்பு உதவி தொகையாக ரூ.2,000/- வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் பயன் பெறுவதற்கு ஏதுவாக அரசால் ஏற்படுத்தப் பட்டுள்ள www.tnsevai.gov.in/Citizen Registration என்ற இணையதள முகவரியின் வாயிலாகவும் விண்ணப் பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நலத்துறை அலுவலர் உலகநாதன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலவாரியம் உறுப்பினர் புஷ்பராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட மாற்றுத்திறனா ளிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×