search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராவல் மண் குவாரியை மூட வேண்டும்-கிராம மக்கள்
    X

    கலெக்டர் மதுசூதனரெட்டியிடம் கிராம மக்கள் மனு கொடுத்தபோது எடுத்த படம்.

    கிராவல் மண் குவாரியை மூட வேண்டும்-கிராம மக்கள்

    • கிராவல் மண் குவாரியை மூட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கல்லங்குடி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலைப்பணிகளுக்கு என்று கிராவல் மண் குவாரி செயல்பட்டு வந்தது. இதனையடுத்து குவாரியில் இருந்து வெளியே வந்த டிப்பர் லாரிகளை வழிமறித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

    இதனையறிந்த வட்டா ட்சியர், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் இதுதொடர்பாக நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினார்கள். துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், கிராம மக்களை சமரசம் செய்து உங்கள் கோரிக்கைகளை மனுவாக கலெக்டரிடம் கொடுங்கள் என்றார்.

    அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், கண்ணங்குடி ஒன்றியத்தில், கண்டியூர் கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் மதுசூதனரெட்டி கலந்து கொண்டதை அறிந்து நேரில் சென்று மனு அளித்தனர்.

    அதில் கல்லங்குடி, புதூர், தே.வயல் கிராம மக்களுக்கும், எங்களுக்கும் மற்றும் எங்கள் கிராமத்தை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் தரும் இடமாக செல்லியம்மன் கோவில் ஊரணி உள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால் ஊரணிக்கு மழை நீர் வருவது தடைபட்டு விடும். மேலும் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் ஆழமான குவாரியில் விழும் சூழ்நிலை உள்ளது. எனவே தாங்கள் குவாரியை மூட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    Next Story
    ×