search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய பள்ளி கட்டிடம் திறப்பு
    X

    விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியபோது எடுத்த படம். அருகில் கலெக்டர் ஆஷா அஜீத், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் டாக்டர் குருசங்கர் மற்றும் பலர் உள்ளனர்.

    புதிய பள்ளி கட்டிடம் திறப்பு

    • வாராப்பூர் ஊராட்சியில் ரூ.1.30 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது.
    • அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட வாராப்பூர் ஊராட்சியில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்து வமனை பங்களிப்புடன் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளி கட்டிடம் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார்.

    அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் விழாவில் கலந்து கொண்டு பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை கல்வி வளம் மிகுந்த மாநில மாக உருவெடுக்கும் பொருட்டு சிறந்த திட்டங் களை கல்வித்துறையில் செயல்படுத்தி பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்விக்கு தனித்தனியாக அதிகளவில் தேவையான நிதிகளை ஒதுக்கீடு செய்து கல்வி துறையை மேம்படுத்தி வருகிறார்.

    பள்ளிக்கல்வித்து றையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி பிற மாநி லங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்திடும் வகையில் மாணவர்களுக்கு கற்றலுக்கு தேவையான கல்வி உப கரணங்கள் வழங்கி வருகிறார். அது மட்டுமன்றி ஆசிரியர்களின் தேவைகளை பூர்த்தி செய்தல் மற்றும் கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள், கழிவறை கட்டிடங்கள், சுற்றுச்சுவர் அமைத்தல், வகுப்பறையில் தேவையான பொருட்கள் ஆகியவைகளை ஏற்படுத்தி மாணவர்களுக்கு கல்வி கற்கின்ற ஆர்வத்தை தூண்டுகின்ற வகையில் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    அவ்வாறு அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு உறுது ணையாக இருந்திடும் வகை யில் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், நன்கொடையாளர்களும் அரசிற்கு மேலும் வலு சேர்த்து வருகின்றனர்.

    அதனடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களின் மேம்பாட்டு வளர்ச்சிக்கு அரசுடன் இணைந்து, பொதுமக்களின் பங்களிப்பு டனும் பல்வேறு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவது பெருமைக்குரிய ஒன்றாகும்.

    அந்த வகையில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனை நிறுவனத்தின் சார்பில் அதன் நிறுவனர் டாக்டர் சேதுராமன் பிறந்த ஊரான வாராப்பூர் ஊராட்சியில் தான் பயின்ற ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியினை மேம்படுத்தும் விதமாக புதிய பள்ளி கட்டிடத்துடன் நூலகம் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தி இந்த ஊராட்சிக்கு வழங்கி பெருமை சேர்த்துள் ளார்.

    சேதுராமனின் கனவை நினைவாக்குகின்ற வகையில் அவரது புதல்வன் டாக்டர் குருசங்கர் சிறப் பான பணியை மேற் கொண்டு தனது தந்தைக்கு பெருமை சேர்த்து மருத்துவ சேவை மட்டுமன்றி, கல்வி சேவையும் புரிந்துள்ளார்.

    இச்சேவையினை வழங்கிய மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிறுவனத்தினருக்கு எனது மனமார்ந்த நன்றி கலந்த பாராட்டுகளை அரசின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தாங்கள் தற்போது வழங்கி உள்ள இக்கொடை மட்டுமன்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வ தற்கும், இதுபோன்று பல்வேறு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் அரசிற்கு உறுதுணையாக இருந்திட வேண்டும் எனவும் இந்த நேத்தில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இதனை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்து வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் என்.சேதுராமன், தலைவர் டாக்டர் எஸ்.குரு சங்கர், மேலாளர் கோபால கிருஷ்ணன், பிராண்டிங் அண்ட் மார்க்கெட்டிங் கார்த்திக் ராஜன், ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன்,திட்ட இயக்குனர் சிவ ராமன், மாவட்ட கல்வி அலுவலர்களான அம்பி காபதி, சுவாமிநாதன், சந்திர சேகர், சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, தலை மையாசிரியர் அலமேலு மங்கை, திருப்புவனம் சேர்மன் வேங்கை மாறன், மாணவரணி ராஜ்குமார், திருப்பத்தூர் ஒன்றிய சேர்மன் சண்முக வடிவேல், எஸ்.புதூர் ஒன்றிய செய லாளர் செல்வராஜ், கட்டிட ஒப்பந்ததாரர் வி. என். ஆர். கன்ஸ்ட்ரக்சன் நாகராஜன், மற்றும் அரசு அலுவலர்கள், மாவட்ட தி.மு.க. ஒன்றிய நகர், கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×