search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
    X

    வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

    • வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
    • நேரடியாக சென்னை தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்படும் அல்லது அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விண்ணப்பிக்கத் தகுதிகள்: 1.1.2022-ம் நாளன்று 58 வயது நிறை வடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணை யவழியில் (ஆன்லைனில்) பெறப்பட்ட வருமா னச்சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதா ரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர்கள் இருவரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

    இதற்கான விண்ணப்பப் படிவத்தை சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சி த்துறையின் வலைத் தளத்திலோ (www.tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவருக்கு மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.3 ஆயிரத்து 500, மருத்துவப்படி ரூ.500 வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

    நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் வருகிற 31-ந் தேதிக்குள் அளிக்கப்பட வேண்டும். நேரடியாக சென்னை தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்படும் அல்லது அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×