search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனாட்சி- சொக்கநாதர் கோவில் ஆனி திருவிழா
    X

    கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்க, சிவாச்சாரியார்கள் யாகம் வளர்த்து பூஜை நடத்தினர்.

    மீனாட்சி- சொக்கநாதர் கோவில் ஆனி திருவிழா

    • மீனாட்சி-சொக்கநாதர் கோவில் ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • கோவில் ஆகம விதிமுறைகள் படி 4 கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதியில் உள்ள மீனாட்சி உடனுறை சொக்கநாதர் கோவில் பாண்டிய மன்னரான மாற வர்ம சுந்தரபாண்டியன் என்ற மன்னரால் கி.பி. 1216 கட்டப்பட்ட மிக பழமை வாய்ந்த கோவில் ஆகும்.

    இந்த கோவில் ஆனது குரு சாப விமோசனம் பெற்ற ஸ்தலமாகும். கோவில் ஆகம விதிமுறைகள் படி 4 கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இங்கு வருடந்தோறும் ஆனி மாதம் திருக்கல்யாணம் மற்றும் தேர் திருவிழா விமரிசையாக நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக 2 வருடமாக திருவிழா நடைபெறவில்லை

    இந்த ஆண்டு திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது. கோவில் வளாகத்தில் கொடிகம்பத்தில் சிவாச் சாரியார்கள் கொடியேற்றி தொடங்கி வைத்தனர். இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சுவாமி -அம்பாள் காட்சி அளித்தனர்.

    விழாவில் வருகிற 10-ந் தேதி அன்று மீனாட்சி-சொக்கநாதர் திருக்கல்யாணமும், 11-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது.

    Next Story
    ×