search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நம்ம ஊரு சூப்பரு சிறப்பு விழிப்புணர்வு பிரசார வாகன பயணம்
    X

    அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். அருகில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி உள்ளார்.

    "நம்ம ஊரு சூப்பரு" சிறப்பு விழிப்புணர்வு பிரசார வாகன பயணம்

    • அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.
    • “நம்ம ஊரு சூப்பரு” சிறப்பு விழிப்புணர்வு பிரசார வாகன பயணத்தை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணாி வட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியம், எஸ்.புதூர் ஊராட்சியில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில், "நம்ம ஊரு சூப்பரு" சிறப்பு விழிப்புணர்வு பிரசார வாகனம் மற்றும் இலவச நடமாடும் மருத்துவ மைய வாகனத்தினை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் தூய்மைப்ப ணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், மீண்டும் மஞ்சள் பை திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மஞ்சள் பை போன்றவைகளை வழங்கி, எஸ்.புதூர் ஊராட்சியில் உள்ள சீலப்ப நாயக்கர் ஊரணியை சுற்றியுள்ள பகுதிகளில் "நம்ம ஊரு சூப்பரு" திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நட்டு வைத்து, ஊரணியை சுற்றி மேற்கொள்ளப்படவுள்ள சுகாதார தூய்மைப் பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் "நம்ம ஊரு சூப்பரு" தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தலைமையில் ஏற்கப்பட்டது.

    இதில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பொன்.மணிபாஸ்கரன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.ராம்கணேஷ், அறக்கட்டளை மேலாண்மை இயக்குநர் நாராயணன், வொக்கார்ட் அறக்கட்டளை மருத்துவ இயக்குநர் ஸ்ரீராம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார், உதவி திட்ட இயக்குநர் விசாலாட்சி, ஒன்றியக்குழுத் தலைவர் விஜயாகுமரன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் வீரம்மாள், சிங்கம்புணரி வட்டாட்சியர் கயல்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, ஊராட்சி மன்றத்தலைவர் ராதாகிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர் ஸ்ரீகாந்த், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய பல்த்சர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×