search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருமாள் கோவில் தேர் பவனி
    X

    பெருமாள் கோவில் தேர் பவனி

    • தேவகோட்டை பெருமாள் கோவில் தேர் பவனி நடந்தது.
    • விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டை நகரில் பழமையான கோதண்டராம சுவாமி பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராமநவமி பிரமோற்சவ விழா கடந்த மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு தீபாராதனை நடைபெற்று கருடசேவை, யானை, குதிரை வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடந்தது. நேற்று காலை பெருமாள் தேரில் எழுந்தருளினார். அதன் பின்னர் தேர்பவனி நடந்தது.

    பெருமாள் கோவில் 4 வீதிகளில் தேர் வலம் வந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து கோவிந்தா நாமம் சொல்லி தேர் இழுத்தனர். தேர் முன்பாக பக்தர்கள் மங்கள இசை, மேளதாளத்துடன் சென்றனர். வழி நெடுகிலும் பக்தர்கள் அர்ச்சனை செய்தனர். 4 வீதிகளிலும் தேர் வலம் வந்தபோது குளிர்பானங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. விழாவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×