search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மானாமதுரை சித்திரை திருவிழாவில் ராட்டினங்களை இயக்க கோரிக்கை
    X

    மானாமதுரை சித்திரை திருவிழாவில் ராட்டினங்களை இயக்க கோரிக்கை

    • மானாமதுரை சித்திரை திருவிழாவில் ராட்டினங்களை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • வைகை ஆற்று பரப்பு முழுவதும் ஜொலிக்கும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரைக்கு அடுத்தபடியாக மானாமதுரை சித்திரை திருவிழாவை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

    மானாமதுரையில் 10 நாட்கள் திருவிழாவும் வைகைஆற்றில் நடைபெறு வதால் வைகை ஆற்று பகுதி களைகட்டிவிடும். ஆற்றில் எங்கு பார்த்தாலும் பொது மக்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    பொதுமக்கள் கூடுவதை முன்னிட்டு ஆற்றில் பொழுதுபோக்குக்காக ஜெயன்ட் வீல், டோரா டோரா, குட்டி ரெயில், பட்டர் பிளை ராட்சத பலூன், ராட்டினங்கள், கப் ராட்டிணங்கள் என ஏராள மான அம்சங்கள் இடம் பெறும். ராட்டிணங்கள் அமைப்பாளர்களால் அமைக்கபட்ட அலங்கார மின்விளக்குகளால் வைகை ஆற்று பரப்பு முழுவதும் ஜொலிக்கும்.

    இந்நிலையில் இந்தாண்டு திருவிழாவில் ஒருசில ராட்டினங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. தொட்டி ராட்டிணம் இயக்கப்படாததால் பொதுமக்களும், குழந்தைகளும் ஏமாற்றமடைந்துள்ளனர். எனவே போதிய பாதுகாப்பு அம்சங்களுடன் அனைத்து வகை ராட்டினங்களையும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர். இந்த தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு திருவிழாவில் ராட்டிணங்களை அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    Next Story
    ×