search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    174 பேருக்கு ரூ.14.35 கோடி கடனுதவி
    X

    மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் நடந்த வாடிக்கையாளர் சந்திப்பில் பல்வேறு கடனுதவி ஆணைகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.

    174 பேருக்கு ரூ.14.35 கோடி கடனுதவி

    • 174 பேருக்கு ரூ.14.35 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.
    • வங்கிகளின் வாயிலாக கடனுதவிகள் பெறும் பயனாளிகள் அதனை முறையாக செலுத்த வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து வங்கிகளையும் ஒருங்கிணைத்து மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் வாடிக்கையாளர்கள் சந்திப்பு முகாம் நடந்தது. இதில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி பங்கேற்று வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வங்கி கடனுதவிகளுக்கான ஆணைகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் ஒரு ஆண்டிற்கு சராசரியாக ரூ.8,500 கோடி வரையிலான வங்கி கடன் உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவிடும் வகையில் வங்கி கடன் உதவிகள் வழங்குவது மட்டுமின்றி அவர்களின் சேமிப்பினையும் முறையாக பாதுகாப்பதற்கும் வங்கிகள் உதவி வருகின்றன.

    மேலும் அனைத்து வங்கிகளின் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஏ.டி.எம்.கார்டு, அதன் கடவுச்சொல் ஆகியவைகள் தொடர்பான விபரங்களை மற்றவர்களுக்கு தெரிவிக்கக்கூடாது. எந்த வங்கியின் வாயிலாகவும் மேற்கண்ட விபரங்கள் குறித்து கோரப்படமாட்டாது. இது குறித்து போதுமான விழிப்புணர்வுடன் பொதுமக்கள் இருக்க வேண்டும்.

    பொதுமக்களின் நலனைக்கருத்தில் கொண்டு, அவர்கள் பயன்பெறும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசின் சார்பில் பல்வேறு கடனுதவிகள் மானியத்துடன் வழங்கப்பட்டு வருகிறது. வங்கிகளின் வாயிலாக கடனுதவிகள் பெறும் பயனாளிகள் அதனை முறையாக செலுத்த வேண்டும்.

    மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்படும் திட்டங்கள் குறித்து அறிந்து கொண்டு, அதனை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் அனைத்து வங்கிகளின் சார்பில் விவசாயக்கடன், கல்விக்கடன், தொழில்கடன், மகளிர் சுயஉதவி குழுக்கடன், வாகனக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் என மொத்தம் 174 வாடிக்கையாளர்களுக்கு ரூ.14.35கோடி மதிப்பீட்டில் கடனுதவிக்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

    இதில் காரைக்குடி மண்டல இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் லீனா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×