search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
    X

    சங்கராபுரம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

    • சங்கராபுரம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    • தாசில்தார் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஒன்றியத்திற் குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி மிகப்பெரிய ஊராட்சியாகும். இங்கு நடந்த தலைவர் பதவி தேர்தலில் இருவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப் பட்டு நீதிமன்ற தீர்ப்பின்படி ஊராட்சி தலைவியாக தேவி மாங்குடி பொறுப் பேற்றார்.

    இந்தநிலையில் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றப்படவில்லை என அவ்வப்போது தர்ணா, ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. நேற்றும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

    இதில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாண்டியராஜன், பா.ஜனதா உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. சோழன் பழனிச்சாமி, செயலாளர் துரைப்பாண்டி, முன்னாள் ஊராட்சி துணை தலைவர் அ.தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் ஸ்ரீதர் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து துணை தலைவர் பாண்டியராஜன் கூறுகையில், ஒரு சிலருக்கு வரி ரசீது வழங்குவதில் பாரபட்சம் நிலவுகிறது.மக்களின் அடிப்படை வசதி கள் உடனடியாக நிறை வேற்றப்பட வேண்டும் என்றார்.

    தேவி மாங்குடி (தலைவர்) கூறுகையில், மக்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படுகின்றன.துணைத்தலைவர் மற்றும் ஒருசில உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தருவதில்லை என்றார்.

    ஆர்ப்பாட்டம் நடத்திய வர்களிடம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுச்சாமி, துணை தாசில்தார் சிவராமன், காவல் ஆய்வாளர் ரவீந்தி ரன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி தாசில்தார் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இரு தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×