search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சவுமிய நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
    X

    சவுமிய நாராயண பெருமாள் கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 

    சவுமிய நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

    • திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • “கோவிந்தா...கோவிந்தா...” என பக்தி கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சவுமிய நாராயணன் பெருமாள் கோவில் உள்ளது. திவ்விய தேசங்களில் ஒன்றான இந்த கோவில்களில் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    கடந்த சில மாதங்களாக கோவிலில் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்தன. இந்தப்பணிகள் முடிவ டைந்ததையொட்டி கும்பாபி ஷேக விழா தொடங்கியது. அதன்படி கடந்த 23-ந்தேதி யாகசாலை பூஜை நடை பெற்றது. பட்டாச்சாரியார் ராமகிருஷ்ணன் தலைமை யில் 60-க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகளை நடத்தினர்.

    கடந்த 3 நாட்களாக காலை, மாலைகளில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. இன்று (28-ந்தேதி) கும்பாபிஷேகம் நடை பெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பெரு மாள்-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

    நேற்று காலை 8ம் கால யாக பூஜை நிறைவு பெற்றது. அதனைத்தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் சவுமிய நாராயண பெருமாள், திருமாமகள் தாயார், ஆண்டாள் மற்றும் ராஜ கோபுரங்களில் உள்ள கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.

    அப்போது அங்கு திரண்டிருந்த பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா...கோவிந்தா..." என பக்தி கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கோ வில் நிர்வாகம் செய்திருந்தது.

    Next Story
    ×