search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய பேரூராட்சி கட்டிட பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்
    X

    சிங்கம்புணரியில் புதிய பேரூராட்சி கட்டிடப் பணிகளை அமைச்சர் பெரிய கருப்பன், கலெக்டர் ஆஷா அஜித் தொடங்கிவைத்தனர். அருகில் பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து உள்பட பலர் உள்ளனர்.

    புதிய பேரூராட்சி கட்டிட பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்

    • சிங்கம்புணரியில் புதிய பேரூராட்சி கட்டிடப்பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம், எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சிக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் 374 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய கட்டிடம் அமைய உள்ளது. இந்த புதிய அலுவலக கட்டிடத்தில் செயல் அலுவலர், தலைவர் அறை, மன்ற கூட்ட அறை, அலுவலர்கள் அறை, கணினி அறை, வசூல் அறை, பதிவு அறை, பொதுமக்கள் காத்திருப்பு அறை, ஜெனரேட்டர், டைனிங் டேபிள், சுகாதார வசதி, இருசக்கர வாகன நிறுத்து மிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கலெக்டர் ஆஷா அஜித் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிட பணிகளை தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

    சிங்கம்புணரி பேரூராட்சிக்கு ரூபாய் 57 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. ரூ.15 கோடி மதிப்பிலான பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ.37 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் ரூ.5 கோடி 50 லட்சம் மதிப்பிலான பணிகள் மதிப்பீட்டில் உள்ளது. மேலும் சிங்கம்புணரியை நகராட்சியாக மாற்றுவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்படும்.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து, துணை சேர்மன் இந்தியன் செந்தில் குமார், செயல் அலுவலர் சண்முகம், வட்டாட்சியர் சாந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. அருணகிரி, மாவட்ட ஊராட்சி சேர்மன் பொன் மணி. பாஸ்கரன், சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம், எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ராஜமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×