search icon
என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பாதுகாப்பான முறையில் நீர் நிலைகளை பயன்படுத்த வேண்டும்.
    • விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்ததது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். செந்தில்நாதன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில் பி.எம்.கிஷான் உதவித் தொகை, பயிர் காப்பீடு, தரிசு நில திட்டம், கொப்பரை கொள்முதல், சொட்டு நீர் பாசனம், பயிர்களை அழிக்கும் வன விலங்கு களை கட்டுப்படுத்துதல், கால்வாய்களை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த கோரிக்கைகள் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை சமர்ப்பிக்கும்படி துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீர் நிலையிலுள்ள ஆக்கிர மிப்புக்களை உடன டியாக அகற்றி பயன் பாட்டிற்கு கொண்டு வரவும், விவசாய நிலங் களை வன விலங்குகள் சேதப்படுத்தாமல் பாது காத்திடவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தினை பாது காத்திடவும், விவசாயிகளின் கோரிக்கை களுக்கிணங்க, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் துரித நடவ டிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    விவசாயிகள் அரசின் திட்டங்களின் பயன்களை முழுமையாக பெற்றிடவும், தேவையான சான்றி தழ்களை வழங்கிடவும், துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளதால், விவசாயிகள் பாதுகாப்பான முறையில் நீர்நிலைகளை பயன்படுத்த வேண்டும். தங்களது கால்நடைகளையும் பாதுகாப்பான முறையில் பராமரித்துக் கொள்ள வேண்டும். மேலும், மழை யினால் கிடைக்கப்பெறும் நீரினை முறையாக பயன் படுத்தி பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால் துரை (தேவகோட்டை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மானாமதுரை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
    • கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் தலைவர் லதா அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் முத்துசாமி, ஒன்றிய ஆணையர் லூயிஸ், மேலாளர் விஜயகுமார், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கியதும் தீர்மானங்கள் வாசிக்கப் பட்டு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து நடை பெற்ற விவாதம் வருமாறு:-

    ருக்குமணி: ராஜகம்பீரம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் களில் கழிவுகள் அகற்றப்ப டாமல் உள்ளது. கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகின் றன. கொசுமருந்து அடிக்கி றார்களா என்று தெரியவில்லை. சுகாதாரத்துறை மூலம் கொசுமருந்து அடிப்ப வர்கள் என்னிடம் தெரிவித்தால் எனது வார்டு முழுவ தும் மருந்து அடிக்க வேண் டிய இடங்களை தெரிவிக்கலாம். குடிநீர் பிரச்சனையை யும் தீர்க்க வேண்டும்.

    சோமசுந்தரம்: எனது வார்டுக்கு உட்பட்ட ஆவாரங்காடு கிராமத்தில் நெல்களம் அமைத்துத்தர வேண்டும். கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மலைச்சாமி: சூரக்குளம் ஊராட் சியில் குடிநீர் மேல் நிலைத் தொட்டி சேதமடைந் துள்ளது. இங்கு புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைத்துத்தர வேண்டும்.

    முருகேசன்: கீழப்பசலை அரசுப் பள்ளியில் சுற்றுச்சு வர் இல்லாததால் இரவில் சமூக விரோத செயல்கள் பள்ளி வளாகத்தில் நடைபெறுகின்றன. எனவே பள்ளி யைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைத்துத் தர வேண்டும்.

    கூட்டத்தில் பேசிய பெரும்பாலான உறுப்பினர் கள் கொசுக்களை கட்டுப்ப டுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஒன்றிய ஆணையர் லூயிஸ், கழிவுநீர் கால்வாய்களில் தேங்கிய கழிவுகளை வெளி யேற்றவும், கிராமங்கள் முழுவதும் கொசு மருந்து அடிக்கவும் அந்தந்த ஊராட்சி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்படும். மேலும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மூலம் நேரடியாக செயல்ப டுத்தக்கூடிய பணிகள் செய்து தரப்படும் என்றார்.

    இவ்வாறு விவாதம் நடை பெற்றது.

    • ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட அறைகளுக்கு சென்னை குற்றப்பிரிவு போலீசார் பூட்டி சீல் வைத்தனர்.
    • விரைவில் அழகப்பன் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    காரைக்குடி:

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த கவுதமி தான் சம்பாதித்த பணத்தில் தமிழகத்தின் பல இடங்களில் நிலம் மற்றும் சொத்துக்களை வாங்கியிருந்தார்.

    இதனை விற்பனை செய்வதற்காக குடும்ப நண்பராக இருந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்த தொழிலதிபர் அழகப்பன் என்பவருக்கு கவுதமி பவர் பத்திரம் மூலம் அதிகாரம் கொடுத்ததாக தெரிகிறது.

    ஆனால் அழகப்பன் கவுதமியின் சொத்துக்களை விற்று அதற்குரிய பணத்தை முழுமையாக தராமல் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மேலும் கவுதமி சொத்துக்களின் ஆவணங்களை முறைகேடு செய்து வேறு பெயருக்கு மாற்றி விட்டதாகவும் புகார் எழுந்தது.

    இதன் மூலம் தன்னை ஏமாற்றி பல கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்திருப்பதாக கவுதமி சென்னை மாநகர மத்திய குற்றப்புலனாய்வு போலீசில் புகார் செய்திருந்தார். அதன் அடிப்படையில் காரைக்குடியைச் சேர்ந்த தொழிலதிபர் அழகப்பன் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் சொத்து மோசடி தொடர்பாக விசாரிக்க சென்னை குற்றப் புலனாய்வு பிரிவு உதவி கமிஷன் ஜான் விக்டர் தலைமையிலான போலீசார் நேற்று காரைக்குடி வந்தனர். கோட்டையூருக்கு சென்ற அவர்கள் அழகப்பனுக்கு சொந்தமான வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். வருவாய்த்துறை அதிகாரிகள் உதவியுடன் இந்த விசாரணை மற்றும் சோதனை நடந்தது. அப்போது அழகப்பனின் குடும்ப உறுப்பினர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    வீட்டில் கவுதமியின் சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்கள் ஏதேனும் இருக்கிறதா? என சல்லடை போட்டு போலீசார் சோதனை மேற்கொண்ட னர். இதனை வீடியோவாகவும் பதிவு செய்தனர். மதியம் தொடங்கிய இந்த சோதனை நள்ளிரவையும் தாண்டி விடிய விடிய நடந்தது. இதில் மோசடி தொடர்பாக சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    காரைக்குடியில் தொழிலதிபர் அழகப்பன் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதை காணலாம்

    காரைக்குடியில் தொழிலதிபர் அழகப்பன் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதை காணலாம்

     இன்று அதிகாலை வீட்டிலிருந்து கைப்பற்றிய சில ஆவணங்களுடன் போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். மேலும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட அறைகளுக்கு சென்னை குற்றப்பிரிவு போலீசார் பூட்டி சீல் வைத்தனர். விரைவில் அழகப்பன் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    பல வருடங்களாக பாரதிய ஜனதாவில் இருந்த நடிகை கவுதமி இந்த மோசடி புகார் விவகாரத்தில் அதிருப்தி அடைந்து அக்கட்சியை விட்டு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனுவை நகர்மன்ற தலைவர் வழங்கினார்.
    • சிவகங்கை நகர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற சிவகங்கை மாவட்டம் சார்பில் வேண்டு கோள் விடுக்கிறோம்.

    சிவகங்கை

    சிவகங்கை தி.மு.க. நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் முதல் அமைச் சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்தார் அதில் கூறியிருப்பதாவது:-

    இந்திய நாட்டின் விடு தலைக்கு தமிழ்நாட்டிற்கு தனிச்சிறப்பு உண்டு. அதில் மாமன்னர் மருதுபாண்டி யர்கள் வீரம், கொடை, சாதி மதம் பாராமல் சமூக நீதி பார்வையோடு இந்திய நாட் டின் விடுதலைக்கு பாடுபட்ட வரலாற்று சிறப்புமிக்க மாமன்னர் மருது பாண்டியர் களின் நினைவை போற்றும் விதமாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் வெண்கல சிலையை வைப்பதற்கு ஆணை பிறப் பித்த முதல் அமைச் சருக்கு சிவகங்கை நகர்மன்றத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அதுபோல சிவகங்கையை ஆண்ட மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக சிவகங்கை மாவட்டத்தில் வெண்கல சிலை வைப்பதற்கு ஆணை பிறப்பிக்க சிவகங்கை நகர்மன்றத்தால் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. (நகர்மன்ற தீர்மானம் எண்.202) மேலும் சிவகங்கை நகரில் மன்னர் மருதுபாண்டியர்களுக்கு வெண்கல சிலையை அமைப்பதற்கும், சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரிக்கு மன்னர் மருதுபாண்டியர் களின் பெயரை சூட்டவும், காளையார்கோவில் நினைவிடம் அருகில் மணி மண்டபம் அமைக்கவும், சிவகங்கை நகர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற சிவகங்கை மாவட்டம் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • திருக்கோஷ்டியூரில் தேவர் ஜெயந்தி விழா நடந்தது.
    • பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் நல அறக்கட்டளை திருமண மண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் பசும் பொன் தேவர் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் 14 ஆம் ஆண்டு சுதந்திர போராட்ட தியாகி பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் 116-வது ஜெயந்தி விழா நாட்டார்கள், சமுதாய தலைவர்கள், கிராம பொது மக்கள் ஆகியோர் முன்னி லையில் தலைவர் கரு.சுப்பி ரமணியன் தேவரின் திருவு ருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து திருக்கோஷ்டியூர் நாட்டார் கள், சமுதாய தலைவர்கள், கிராம பொதுமக்கள் என பலரும் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். இவ்வி ழாவில் திரளான பொதுமக் கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் நல அறக்கட்டளை திருமண மண்டபத்தில் ஆயி ரக்கணக்கானோருக்கு அன்னதானம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    • சிவகங்கைக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • மானாமதுரையில் மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான செந்தில் நாதன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவிற்கு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் சென்ற அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிவகங்கை மாவட்டம் சார் பில் மானாமதுரையில் மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான செந்தில் நாதன் தலைமையில் வர வேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் முன் னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் நாகராஜன், கற்பகம் இளங்கோ, மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் கருணாகரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், நகர் செயலாளர் ராஜா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பெண்மணிபாஸ் கரன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பாசறை செயலாளர் பிரபு, மண்டல தகவல் தொழில் நுட்ப அணி தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள். செல்வமணி, பழனிச்சாமி, அருள்ஸ்டிபன், சேவியர் தாஸ், ஸ்ரீ தரன், கோபி, ஜெகதீஸ்வரன், ஜெயபிர காஷ், மாவட்ட பாசறை இணை செயலாளர் பிரபு, கூட்டுறவு வங்கி தலைவர் சகாயசெல்வராஜ், சக்கந்தி ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, நாலு கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், வழக்கறிஞர் மணிமாறன், மாவட்ட தக வல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சங்கர் ராமநாதன், மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ், பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன் மற்றும் ஏராளமானோர் நிர் வாகிகள் கலந்து கொண்ட னர்.

    • ஐம்பது ஆயிரம் பனைமர விதைகளை நட்டு ஊராட்சி மன்ற தலைவர் சாதனை படைத்தார்.
    • 100 நாள் பணியாளர்களையும் சுற்றுவட்டார கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல் லல் ஒன்றியம் இளங்குடி கிரா மத்தில் ஊராட்சி மன்ற தலை வராக இருந்து வருப வர் நேசம் ஜோசப். இவர் பொறுப் பேற்ற காலம் முதல் தரிசு நில பகுதிகள், அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகிய பகுதிகளில் நெல்லி தோட்டம், முந்திரி தோட்டம், காய்கறி தோட்டம், மூலிகை தோட்டம் மற்றும் பிற பழ வகைகளை சேர்ந்த மரக் கன்றுகளை நடவு செய்து அரசுக்கு வருவாய் ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகி றார்.

    பருவ மழை காலங்களில் இப்பகுதிகளில் அதிக மழை பொழிவை கொண்டு குறுங் காடுகள் அமைத்தல், அடர்ந்த வனம் அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். கிராமத்தில் அனைவருக்கும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஏற்படுத்துதல், பிளாஸ் டிக் பயன்பாடு இல்லா ஊராட்சியாக மாற்றுதல், பால் உற்பத்தி மற்றும் விற் பனை, நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறந்த ஊராட் சியாக மாற்றியுள்ளார்.

    தற்போது கிராம விரிவாக்கத் திட்டத்தின் கீழ் 50,000 பனை விதைகளை இப்பகுதிகளில் நடவு செய்ய முடிவெடுத்து அதற்கான விதைகள் சேகரிக்கும் பணி யில் தீவிரமாக ஈடுபட் டார். அந்த விதைகளை ஊராட்சிக் குட்பட்ட நீர்நிலை மற்றும் வனப்பகுதிகளில் உள்ள சுமார் 36 ஏக்கர் பரப்பளவில் 30 ஆயிரம் பனை விதைக ளையும், இளங்குடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து நாச்சியா புரம் வரையிலும், அதேபோல் இளங்குடியில் இருந்து கரு குடி கிராமம் வரையிலான இவ்விரண்டு இடத்திற்கும் 2 கிலோ மீட்டர் அளவிற்கு சம அளவு தூரம் கொண்ட சாலையின் இரு ஓரங்களிலும் சுமார் 20,000 பனை விதை களையும் நடவு செய்ய முடி வெடுத்தார்.

    மேலும் மரம் வளர்த்தல் குறித்த அவசியத்தையும், அதற்கான விழிப்புணர்வை யும் இளைய சமுதாயமான மாணவ மாணவியருக்கு ஏற்படுத்த வேண்டுமென்று ஊராட்சி மன்ற தலைவர் அதற்கான நடவடிக்கையில் இறங்கினார். அதன் அடிப்ப டையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்லூரியில் நிறும செயலறியல் துறையில் பயிலும் மாண வர்களை வரவழைத்து அவர் களின் முன்னிலையில் பனை விதைகளை நடவு செய்யும் நிகழ்ச்சியை அழகப்பா கல்லூரி துணைவேந்தர் முனைவர் ஜி.ரவி தொடங்கி வைத் தார்.

    முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் உருவாக்கிய பழ தோட்டங்களுக்கு துணை வேந்தர் நேரடியாக சென்று அவற்றை பார்வையிட்டு அவரின் முயற்சியை வெகு வாக பாராட்டினார். நடை பெற்ற இந்நிகழ்ச்சியில் நிறும செயலறியல் துறைத் தலைவர் வேதிராஜன், பேராசிரியர்கள் அலமேலு, நடராஜன், சுரேஷ், திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன் மூர்த்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்து, வார்டு உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், காரைக்குடி ரோட்டரி சங்க நிர்வாகிகள், கிராம பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    72 மணி நேரத்தில் 50,000 பனை நடவு செய்து ஒரு சாத னையாளராக திகழும் ஊராட்சி மன்ற தலைவரை யும், 100 நாள் பணியாளர்களை யும் சுற்றுவட்டார கிராம மக்க ளும், சமூக ஆர்வலர்க ளும் வெகுவாக பாராட்டி வரு கின்றனர்.

    • அரசின் திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
    • விவசாயிகள் முழுமையாக அறிந்து பயன் பெற்று தங்கள் வாழ்வா தாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான் குடி ஆகிய பகுதிகளில் வேளாண்துறை, தோட்டக் கலைத் துறை, வேளாண் பொறியியல் துறைகளின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    முதலமைச்சர் வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காக்கின்ற வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் மானியத்துடன் கூடிய வேளாண் இடு பொருட்கள் மற்றும் உயிர் உரங்கள், நிலத்தின் தன்மை கேற்றவாறு பயிரிடுவதற்கு உரிய வழிகாட்டுதல்கள், சோலார் மின்வசதி, ஆழ்துளை கிணறு ஏற்படுத் துதல் மற்றும் காய்கறி, பழ விதைகள் உள்ளிட்ட பல் வேறு வசதிகளை அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப் பட்டு அவர்களின் நலன் காக்கப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் கடைகோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசின் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் முழு மையாக அறிந்து பயன் பெற்று தங்கள் வாழ்வா தாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் தனபாலன், செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) முரேஷ்குமார், வேளாண்மை உதவி இயக்குநர்கள் ரவிசங்கர், தங்கபாண்டியன், உதவி செயற்பொறியாளர் வேளாண் பொறியியல் துறை இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றார்.

    காளையார் கோவில்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையில் பங்கேற்பதற்காக இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம் வழியாக சென்றார்.

    இந்த நிலையில் மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான பெரிய கருப்பன் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மாவட்ட எல்லையான திருப்பு வனத்தில் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். காலை 8.35 மணி அளவில் திருப்புவனம் பகுதிக்கு முதல்-அமைச்சர் வந்தார். அங்குள்ள மின்வாரிய அலுவலகம் அருகே நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சருக்கு பட்டாடை கொடுத்து அமைச்சர் பெரியகருப்பன் வரவேற்றார்.

    தொடர்ந்து நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த், மாவட்ட தி.மு.க அவை தலைவர் கணேசன், மாவட்ட துணை செயலா ளர்கள் த.சேங்கை மாறன் ஜோன்ஸ் ரூசோ, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில் குமார், துணை அமைப்பாளர் பொற்கோ, நகர செயலா ளர்கள் குணசேகரன், துரை ஆனந்த், பொன்னுச்சாமி, பெரி.பாலா, நகர் மன்ற தலைவர் முத்து துரை, முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி, மதியரசன், ஒன்றிய செயலா ளர்கள் வசந்தி சேங்கை மாறன், கடம்பசாமி, நிர்வாகிகள் மோகன்ராஜ், பழனி, அண்ணாமலை, சேகர் உள்பட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் முதல்-அமைச்சரை வரவேற்று வழியனுப்பி வைத்தனர்.

    • மானாமதுரையில் கழிவுநீர் கால்வாய் தூய்மை பணி தொடக்கப்பட்டது.
    • மழை தண்ணீர், கழிவு நீர் தடையின்றி செல்வது கண்காணிக்கப்படும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கால்வாய்களில் தேங்கி கிடக்கும் கழிவுகளை அகற்றி சீரமைக்கும் பணிகள் தொடங்கியது. 27-வது வார்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். சுற்றுப்புற தூய்மை குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பாண்டிச்செல்வம், தி.மு.க. நகர செயலாளர் பொன்னுச்சாமி, நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து மாரியப்பன்கென்னடி கூறியதாவது:-

    மானாமதுரை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் கால்வாய்களில் தேங்கிக் கிடக்கும் கழிவுகளால் மழை நேரங்களில் கால்வாய் வழியாக மழைநீர் செல்ல முடியாத நிலை இருந்து வருவதாக புகார் வந்தது. இதையடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் கால்வாய்களில் தேங்கிக் கிடக்கும் கழிவுகளை வெளியேற்ற ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கால்வாய்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றிய பின்னர் கால்வாய்கள் வழியாக மழை தண்ணீர், கழிவு நீர் தடையின்றி செல்வது கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்டப்பணிகள் தனிக்குழு கூட்டம் நடந்தது.
    • அந்தந்த துறை களின் சார்பில் மேற் கொள்ளப் பட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் மாவட்ட அளவிலான தனிக்குழு கூட்டம் சார்பு நீதிபதி பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் வருவாய் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் அந்தந்த துறை களின் சார்பில் மேற் கொள்ளப் பட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கடந்த மாதம் குழந்தைகள் கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவில் காணாமல் போன பெண்கள் மற்றும் குழந்தை கள் உள்பட 62 பேர் கண்டறியப்பட்டு, உரியவர்க ளிடம் ஒப்படைக்கப்பட்டுள் ளது. மாவட்ட சமூகநல அலுவலக ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் பெண்கள் குடும்ப வன்மு றை குடும்ப பிரச்சினைகள் தொடர்பாக வரப்பெற்ற மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 24 குடும்ப பிரச்சினை களுக்கு தீர்வு காணப்பட்டது.

    அதுபோல் மாவட்ட சிறப்பு ஆய்வுக்குழு உறுப்பி னர்கள் குழந்தை தொழி லாளர்கள் கொத்தடிமை கள் குறித்து தொழிற் சாலைகள், வணிக நிறுவ னங்கள், ஓட்டல்களில் ஆய்வு மேற்கொள்ளுதல் மற்றும் பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் கண்ட றியப் பட்டு அவர்களை பள்ளி சேர்த்து தொடர்ந்து படிக்க செய்தல் போன்ற பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப் பட்டது.

    • மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
    • முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    காளையார்கோவில்

    மருதுபாண்டியர்களின் 222-வது குருபூஜையை முன்னிட்டு காளையார் கோவிலில் உள்ள நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்ல மண்டி நடராஜன், கொள்கை பரப்பு செய லாளர் மருது அழகுராஜ், வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன், சிவகங்கை மாவட்ட செயலாளர் கே.ஆர்.அசோகன், கே வி. சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் யோக.கிருஷ்ண குமார் வே.ஆரோக்கியசாமி, சிவகங்கை நகர்கழக செயலாளர் துரைஆனந்த் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் எஸ். மாங்குடி எம்.எல்.ஏ. மாவட்ட காங்கிரஸ் தலை வர் சஞ்சய் காந்தி, பொதுக் குழு உறுப்பினர் ஜெய சிம்மன், கணேசன், சன்னாசி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல். ஏ. ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, சிவாஜி மற்றும் கட்சியினர் மரியாதை செலுத்தினர். நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

    இதேபோல் ம.தி.மு.க. மாவட்ட பொருளாளர் சார்லஸ் , பா.ஜ.க. மேப்பல் சக்தி, மாவட்டத்தலைவர் பில்லப்பன், வழக்கறிஞர் சொக்கலிங்கம், மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஸ்ரீதர் வாண்டையார் மற்றும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

    ×