search icon
என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
    • மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் கட்சியினர் மருதுபாண்டியர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    சிவகங்கை

    மருதுபாண்டியர்கள் குருபூஜையை முன்னிட்டு காளையார் கோவிலில் உள்ள அவர்களது நினைவிடத்தில் அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் கட்சியினர் மருதுபாண்டியர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் சிவகங்கை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், நகர் செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், சேவியர்தாஸ், பழனிச்சாமி, சிவாஜி, கோபி, அருள்ஸ்டிபன், செல்வமணி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் செந்தில்முருகன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவதேவ்குமார், காளையார் கோவில் ஒன்றிய பெருந்தலைவர் ராஜேஸ்வரி கோவிந்தராஜ், ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் சரவணன்.

    தகவல் தொழில்நுட்ப பிரிவு தமிழ்செல்வன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சங்கர்ராமநாதன், மற்றும் மறவமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் நவநீதன்.

    மாவட்ட பாசறை இணை செயலாளர் பிரபு அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் கண்ணப்பன் மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ், சக்கந்தி ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் குழந்தை உள்ளிட்ட ஏராள மான அ.தி.முக. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மருதுபாண்டியர்கள் 222-வது குருபூஜை; அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
    • பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர்.

    காளையார்கோவில்

    ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்த மாமன்னர்கள் மருது சகோத ரர்களின் 222-வது குருபூஜை விழா அவர்களது நினைவிடம் அமைந்துள்ள காளையார்கோ விலில் கொண்டாடப்பட்டது.

    மருதுபாண்டியர்களின் நினைவிடத்தில் காலை 8 மணிக்கு சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து மருதுபாண்டியர் பேரவை சார்பில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து வழிபாடு நடத்தினர். நினைவிடத்தில் பால் அபிசேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பு கள், பொதுமக்கள் திரளாக வந்து மருதுபாண்டி யர்கள் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    மருதுபாண்டியர்கள் நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அரவிந்த் தலை மையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சிவகங்கை, இளையான்குடி, திருப்புவனம், கல்லல், காளை யார் கோவில் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சோ தனைச் சாவடி களில் சி.சி.டி.வி. கேமராவுடன் அமைக்கப் பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மருதுபாண்டியர்கள் நினைவு நாளை முன்னிட்டு மதுரையில் இருந்து சிவகங்கை வழியாக காளையார் கோவில் சருகனிவழியாக தேவ கோட்டை தொண்டி செல்லும் அனைத்து பேருந்துகளும் பரமக்குடியி லிருந்து இளையான்குடி காளையார் கோவில்,கல்லல் வழியாக திருச்சி, தஞ்சாவூர் செல்லும் அனைத்து பேருந்து களும் முழுவதும் ரத்து செய்யப்பட்டது. எவ்வித முன்அறிவிப்பின்றி பேருந்து கள் ரத்துசெய்யப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் சிரமப் பட்டார்கள். இன்று முகூர்த்த நாளாக இருந்ததால் பொது மக்கள் மிகவும் பாதிப்பிற் குள்ளானார்கள். மருது பாண்டியர்கள் நினைவி டத்தில் பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் சமுதாய அமைப்பு நிர்வாகிகள் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

    • மருது பாண்டியர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.
    • நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நாளை (27-ந்தேதி, வெள்ளிக்கிழமை) மாமன்னர் மருது பாண்டியர் களின் 222-வது நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சட்டம், ஒழுங்கை பராமரிக்கும் வகை யில் நாளை 27-ந்தேதி சிவகங்கை மாவட்டத்தில் சிவ கங்கை, திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை, தேவகோட்டை ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படு கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது.
    • முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விளா அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது.

    முதன்மை நிர்வாக அதிகாரி ஐஸ்வர்யா சரண்சுந்தர் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் மற்றும் தாளாளர் முனைவர் ஆர்.சுவாமிநாதன் கல்லூரியின் சாதனைகள் மற்றும் பாடப்பிரிவுகளைப் பற்றி விரிவாக எடுத்து ரைத்தார். இதில் அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் க.ரவி, முன்னாள் துணை வேந்தர் சொ.சுப்பையா,பூமி குழுமம் தலைவர் நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங் களை வழங்கி வாழ்த்தினர்.

    சோகோ இந்தியா நிறு வன தலைவர் பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு மாண வர்களை காணொலி காட்சி மூலம் வாழ்த்தினார்.இந்த பட்ட மளிப்பு விழாவில் மொத்த மாக 465 மாணவர்கள், 379 மாணவி கள் என மொத்தம் 844 பேர் பட்டம் பெற்றனர். 16 பேர் பல்கலைக்கழக அள வில் ரேங்க் எடுத்து தங்க பதக்கம் பெற்றனர்.

    இக்கல்லூரியானது பிற்பட்ட கிராமப்புற இளை யோர் நலம் கருதி, கடந்த 2016-ம் ஆண்டு 40 என்ற எண்ணிக்கையில் இளங் கலை (கணிதம், கணினி யியல், வணிகப் பயன் பாட்டியல், தகவல் தொழில் நுட்பம்) ஆகிய பாடப் பிரிவுடன் ஆரம்பிக்கப் பட்டது.

    இன்று இளங்கலையில் 19 பிரிவுகளும், முதுகலை யில் 7 பிரிவுகளும் ஆய்வுப் பிரிவு கணிதம் மற்றும் கணிணி அறிவியல் ஆகி யவை தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாணவர்கள் பன்முகத் திறனுடன் மாநில அளவி லும், மாவட்ட அளவிலும் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது தனித் திறமையை வெளிப்படுத்தி வருகின்ற னர். மேலும் மாவட்ட கலெக்டர், மாநில முதல்- அமைச்சர்கள், அமைச்சர் கள், துணை வேந்தர்கள், பல்வேறு ஆளுமை களிட மும் பொற் கரங்களால் பண முடிப்பு களையும், விருதுகளையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்து உள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.

    பட்டமளிப்பு விழாவில் வித்யாகிரி கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் ஹாஜி முகமது மீரா, காரைக்குடி வித்யாகிரி பள்ளி முதல்வர் ஹேம மாலினி சுவாமிநாதன். முன்னாள் எம். எல். ஏ. எச்.ராஜா, நகர்மன்ற தலைவர் சே.முத்துதுரை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • நெற்குப்பையில் ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடந்தது.
    • நகர செயலாளரும், பேரூராட்சி சேர்மனுமான கே.பி.எஸ்.பழனியப்பன் சீருடை அடங்கிய தொகுப்பினை ஓட்டுனர்களுக்கு வழங்கினார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 19 வருடங்களாக ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு தி.மு.க. மாவட்ட மாவட்ட செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான

    கே.ஆர்.பெரிய கருப்பன் தன் சொந்த நிதியிலிருந்து ஆயுத பூஜை தினத்தன்று சீருடை வழங்கி வருகிறார். அதன் அடிப்படையில் அமைச்சர் ஏற்பட்டில் இந்த வருடம் நெற்குப்பை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டுனர்களுக்கு நகர செயலாளரும், பேரூராட்சி சேர்மனுமான கே.பி.எஸ்.பழனியப்பன் சீருடை அடங்கிய தொகுப்பினை ஓட்டுனர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர் முத்தழகு, இளைஞர் அணி அமைப்பாளர் பாண்டியன், கூட்டுறவு சங்க தலைவர் செல்வம், வட்டச் செயலாளர் மாணிக்கம், கவுன்சிலர் வெள்ளைச்சாமி, ஒன்றிய பிரதிநிதி முத்து, தகவல் தொழில்நுட்ப அணி முருகேசன், மாணவரணி அமைப்பாளர் பாஸ்கரன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் வீரமணி மற்றும் ஒன்றிய பேரூர் நகர நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

    • தேவகோட்டையில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    தேவகோட்டை

    தேவகோட்டை சிவன் கோவில் அருகே மகர் நோன்பு பொட்டலில் அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தேவகோட்டை நகர் சிவன் கோவிலில் நவராத்திரி விழா முன்னிட்டு தினமும் உற்சவர்கள் வீதி உலா வந்தது. நேற்று இரவு சிவன் கோவில் எதிர்புறம் உள்ள மகர் நோன்பு திடலில் நகர சிவன், வெள்ளையன் ஊரணி ரங்கநாத பெருமாள் கோதண்ட ராமர், கிருஷ்ணர், விநாயகர் குதிரை வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு முக்கிய வீதிகளில் வலம் வந்து நேற்று இரவு 5 சுவாமிகளும் ஒன்றினைந்து ஒரே இடத்தில் தனித்தனியாக அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. எய்த அம்புகளை எடுத்துச் சென்றால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் தங்குதலையின்றி நடக்கவும் செல்வங்கள் பெருகும் என்று ஐதீகத்தால் பொதுமக்கள் அதனை ஆவலுடன் போட்டி போட்டு அம்புகளை பிடித்து சென்றனர். இந்நிகழ்ச்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் நகர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான சுமார்

    50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

    • காளையார் கோவிலில் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா நடந்து வருகிறது.
    • அரசியல் கட்சியினர் மரியாதை-2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    காளையார்கோவில்

    சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்களை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர். பின்னர் அவர்களது கடைசி ஆசை யின்படி மருது சகோத ரர்களின் உடல்கள் காளை யார்கோவிலில் உள்ள சொர்ண காளீஸ் வரர் கோவில் முன்பு அடக்கம் செய்யப்பட்டது. மருது சகோதரர்களின் தியா கத்தை போற்றிடும் வகை யில் ஆண்டுதோறும் அக். 27-ந்தேதி மருது பாண்டி யர்கள் குருபூஜை விழா காளையார்கோவிலில் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான 222-வது குருபூஜை விழா வருகிற 27-ந்தேதி (வௌ்ளிக் கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் மருது பாண்டியர் நினைவிடத்தில் சிறப்பு தியாக பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் நினைவிடம் முன்பு பொங்கல் வைத்தும், முடி காணிக்கை செலுத்தி யும் வழிபாடு நடத்துவார்கள்.

    அதன்பின் அரசியல் கட்சி பிரதிநிதிகள், பல்வேறு சமுதாய அமைப் பினர், பொதுமக்கள் மருது பாண்டியனர் நினை விடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்து வார்கள். குரு பூஜை விழா வில் ராமநாதபுரம், சிவ கங்கை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொள்ள காளை யார்கோவிலுக்கு வரு வார்கள்.

    இதையொட்டி சிவகங்கை மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    முக்கிய வழித்தடங்க ளான திருப்புவனம், சிவ கங்கை, கல்லல், இளை யான்குடி, காளையார் கோவில் ஆகிய பகுதிகளில் சோதனை சாவடி அமைக் கப்பட்டு கண்காணிப்பு காமிராவும் பொருத்தப் பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரம் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடுத் தப்பட உள்ளனர். குருபூஜை விழாவிற்கு வருவோர் அரசு விதித்துள்ள கட்டுப் பாடுகளை கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும். வாகனங்ளில் ஒலிபெருக்கி பயன்படுத்த கூடாது. கோஷங்கள் போடக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறி உள்ளனர்.

    மருதுபாண்டியர் குரு பூஜை மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 30-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க. சார்பில் சுதந்திர போராளி குயிலிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
    • சிவகங்கை நகர செயலாளர் ராஜா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சுதந்திர போராட்ட பெண் போராளி குயிலியின் வீரத்தை போற்றும் வகையில் சிவகங்கை பையூர் பழமலை பகுதியில் வேலு நாச்சியார் நினைவிடத்தில் குயிலி நினைவு ஸ்தூபிக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமை யில் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் குயிலி நினைவிட ஸ்தூபி யில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப் பட்டது. இதில் சிவகங்கை நகர செயலாளர் ராஜா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், குணசேகரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன் ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், சேவியர்தாஸ், பழனிச்சாமி, சிவாஜி, கோபி, அருள்ஸ்டிபன், செல்வமணி, சிவசிவஸ்ரீதர், ஜெயபிரகாஷ் சோனைரவி, கல்லல் செந்தில்குமார், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் செந்தில் முருகன், காளையார் கோவில் ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரி கோவிந்தராஜ், ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு தமிழ்செல்வன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சங்கர்ராமநாதன், மற்றும் மாவட்ட கவுன்சிலர் மாரிமுத்து,தேவராஜ், பில்லூர் ராமசாமி, நகர் துணை செயலாளர் மோகன்,மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ், மாவட்ட பாசறை பொருளாளர் சரவணன், அமைப்பு சார அணி மாவட்ட இணை செயலாளர் அழகர்பாண்டி, மாண வரணி அன்பு,சக்கந்தி ஊராட்சி மன்ற துணை தலைவர் செந்தில்குமார் என ஏராளமான நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.

    • மருதுபாண்டியர்கள் நினைவு தினம் அமைச்சர்கள்-கலெக்டர் பங்கேற்கின்றனர்.
    • மருது சகோதரர்களின் தியாகத்தை போற்றும் விதமாக சென்னையிலும் தி.மு.க. அரசு சிலை நிறுவி பெருமைபடுத்தியது என்றார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மருது பாண்டியர் நினைவிடத்தில் 222-வது நினைவுநாள் இன்று 24-ந் தேதி கடைப்பிடிக்கபடுகிறது. இதையொட்டி மருது பாண்டியர் வாரிசுதாரர்கள் நினைவு மண்டபத்தின் முன்புறத்தில் சர்க்கரை பொங்கல் வைத்தனர். பின்னர் மருதுபாண்டியர் சிலை முன்பு படையல் இட்டு வழிபாடு செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் வாரிசு தாரர் ராமசாமி மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நினைவு மணி மண்டபம் பகுதியில் மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் கொடியேற்றி வைத்து அரசு விழாவை தொடங்கி வைத்தார்.

    நினைவு மண்டபம், நினைவிட தூண் பகுதியில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், சமுதாய அமைப்புகள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் பாதுகாப்பு பணியில் சுமார் 1400 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு அவர்களின் மணிமண்டபம் மற்றும் நினைவு தூண்களில் தமிழக அரசு சார்பில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர். எஸ்.ராஜாகண்ணப்பன் மற்றும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் பேசுகை யில், அண்ணா முதல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை சுதந்திர போராட் டத்திற்கு பாடுபட்ட தலைவர்களை யும், தமிழ் மொழிக்காக, தமிழ் இனத்திற்காக பாடு பட்டவர்களின் புகழைப் பரப்புவதில் தி.மு.க. முதல்- அமைச்சர்களுக்கு இணையானவர்கள் யாரும் இல்லை. மருது சகோத ரர்களின் வீர வரலாற்றை கருணாநிதி அறிந்து அவர்க ளுக்கு சிலை வைத்து நினைவுமண்டபம் கட்டி னார்.

    சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை தி.மு.க. அரசு மூடி மறைப்ப தாக சிலர் நேற்று கூட திருச்சியில் உயர்ந்த பதவியில் இருந்து கொண்டு வரலாறு தெரியாமல் அவதூறாக பொறுப் பற்றதனமாக யாரோ எழுதிக் கொடுத்ததை பேசியுள்ளார். மருது சகோதரர்களின் தியாகத்தை போற்றும் விதமாக சென்னையிலும் தி.மு.க. அரசு சிலை நிறுவி பெருமைபடுத்தியது என்றார்.

    • அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
    • தொழிலாளர்கள் தாங்களாகவே விவரங்களை htts://eshram.gov.in இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாநில அரசின் பல்வேறு வகையான நலத்திட்டங்க ளின் கீழ் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் மற்றும் 370 வகையான அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை பொதுசேவை மையங்களி லும், இ-சேவை மையங்க ளிலும் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தொழிலாளர்கள் தாங்களா கவே விவரங்களை htts://eshram.gov.in இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.

    கட்டுமான தொழிலா ளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டு பணியாளர்கள், விவசாய தொழிலாளர்கள், குத்தகை தாரர்கள், பேக்கிங் செய்வோர், தச்சர்கள், கல்குவாரி தொழிலாளர்கள், மர ஆலை தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள், முடி திருத்துவோர், தெரு வியாபாரிகள், சிறு வியா பாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள், ேதாட்ட தொழிலாளர்கள், பால் வியாபாரிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் போன்ற வர்களின் விவரங்கள் இந்த தளத்தில் பதிவு செய்யப் பட்டு வருகிறது.

    இதில் 16 முதல் 59 வயதுடைய தொழிலாளர்கள் தங்களது விவரங்களை கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்த பின்னர் அவர்களுக்கு 12 இலக்க எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும். அவர்கள் வேலை காரணங்களுக்காகவோ, அல்லது வேறு காரணங்களுக்காகவோ புலம் ெபயர்ந்தாலும் அர சின் சலுகைகளை பெற இந்த அடையாள அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம். தற்போது வரை சிவகங்கை மாவட்டத் தில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 88 அமைப்புசாரா தொழி லாளர்கள் பதிவு செய்து உள்ளனர்.

    தரவு தளத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலா ளர்களின் 31.3.2022-க்கு முன்பாக விபத்தில் உயிர் இழந்த தொழிலாளர்களுக்கு ரூ.2 லட்சம், விபத்தில் கை, கால்களை இழந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் கருணை தொகையாக வழங்கப்பட உள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் தரவுதளத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களில் 31.3.2022-க்குள் விபத்தி னால் உயிரிழந்திருந்தாலோ அல்லது ஊனமடைந்திருந்தா லோ அந்த தொழிலாளர்கள் அல்லது வாரிசுதாரர்கள் சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அம லாக்கம்) அலுவலகத்தை அணுகி கருணை தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அகவிலைப்படி உயர்வை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
    • ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் அறிவுறுத்தினர்.

    சிங்கம்புணரி

    தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நாட்டில் முக்கிய நகரங்க ளின் விலைவாசி புள்ளி உயர்வு அடிப்படையில் 6 மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு அறிவிப்பது வழக்கம்.

    மத்திய அரசு ஊழியர்க ளுக்கு எப்பொழுதெல்லாம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறதோ, அதே தேதியில் மாநில அரசு ஊழி யர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரி வித்துள்ளார்.

    இந்நிலையில் தமிழ்நாடு அரசும் மத்திய அரசை பின்பற்றி அகவிலைப்படி உயர்வை அளிக்க வேண்டும் என ஆசிரியர், அரசு ஊழியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    தி.மு.க. அரசு பொறுப் பேற்று கடந்த இரண்டரை ஆண்டுகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி பல கட்ட போராட்டங் களை நடத்தி வந்திருக்கி றோம். ஒவ்வொரு முறையும் நிதி நிலையை காரணம் காட்டி எங்கள் கோரிக்கைகள் கிடப்பில் போடப்படு கிறது.

    ஊக்க ஊதியம், சரண் விடுப்பு ஒப்படைப்பு, பதவி உயர்வு போன்ற பலன்களை கடந்த சில ஆண்டுகளாகவே எங்களிடம் இருந்து பறிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் விலைவாசி புள்ளி உயர்வுக்கு ஏற்றால்போல் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு எப்பொழு தெல்லாம் அகவிலைப்படி உயர்வு அளிக்கிறதோ அதை யொட்டி தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் அக விலைப்படி உயர்வு வழங்கட்டு வந்தது.

    கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி அகவிலைப்படி காலம் தாழ்த்தி வழங்கப் பட்டது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழி யர்களிடம் ஏற்பட்ட அதி ருப்திக்கு பின்னர் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு எப்பொழுதெல்லாம் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கிறதோ அதே தேதி யில் தமிழ்நாடு அரசில் பணி புரியும் ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என கடந்த மே 2023-ல் வெளியான அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே முதல்- அமைச்சர் தனது செய்தி குறிப்பில் அளித்த உறுதியின் அடிப்படையில் தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள 4 சதவீத அகவிலைப்படி உயர்வை ஜூலை 1 முதல் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரூ.10 கோடி மதிப்பில் கழிவுநீரரை சுத்தப்படுத்தி நன்னீராக்கும் திட்டம் மும்முரமாக நடக்கிறது.
    • கழிவுநீர் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்ய உத்தரவிடப்பட்டு அதற்கான வேலைகளும் நடந்து வருகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் கழிவுநீரை நன்னீராக்கும் திட்டம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் உருவாகி வருகிறது.18 வார்டுகளுடன் பேரூராட்சி அந்தஸ்தில் இருந்த மானாமதுரை தி.மு.க. ஆட்சி பொறுப் பேற்று சில மாதங்களிலேயே நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும் இதன் வார்டுகள் 27 ஆக உயர்த்தப்பட்டன.

    நகராட்சியின் முதல் தலைவராக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பின ரான தி.மு.க.வைச் சேர்ந்த எஸ்.மாரியப்பன்கென்னடி பதவி வகித்து வருகிறார். நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் அலுவலகத்துக்கு தேவை யான பணியாளர்கள் நிய மிக்கப்படாமல் அலுவலக பணியில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தற்போது நகராட்சி அலுவலகத்தில் அனைத்து பதவிகளுக்கும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. நகராட்சி அலுவலகத்துக்கு பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. வார்டுகளில் வலியுறுத்தப்படும் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தலைவர் மாரியப்பன் கென்னடி உத்தரவின்பேரில் நிறை வேற்றப்பட்டு வருகிறது. அரசகுழி பகுதியில் மின்மயான தகனமேடை அமைக்கும் பணி நிறை வடையும் நிலையில் உள்ளது.

    தற்போது மானாமதுரை நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தார், சிமெண்ட் சாலைகள், பேவர்பிளாக்கல் பதித்தல், கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல பணிகள் நடைபெற்று வருகின்றன.

    குறிப்பாக மானா மதுரையில் சேகரமாகும் கழிவுநீரை வைகை ஆற்றுக்குள் அமைக்கப்படும் பெரிய அளவிலான கிணற்றுக்கு கொண்டுவந்து சேர்த்து அங்கிருந்து குழாய்கள் மூலம் கழிவுநீரை தாயமங்கலம் செல்லும் சாலையில் அமைக்கப்பட வுள்ள சுத்திகரிப்பு நிலை யத்துக்கு கொண்டு வந்து நண்ணீராக்கி அதை விவ சாய தேவைக்கு பயன்படுத்த திட்டம் தயாரித்து அதற்காக அரசு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

    நகரில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வீதிகளை சுத்தப்படுத்தும் பணி தினமும் நடந்து வருகிறது.

    இது குறித்து நகர்மன்ற தலைவர் எஸ்.மாரியப்பன் கென்னடி கூறுகையில், மானாமதுரை நகருக்கு தேவையான அனைத்து வசதிகளும் வார்டு உறுப்பி னர்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறை யும் நகராட்சிக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யும்போது அனைத்து வார்டுகளுக்கும் தேவையான வசதிகள் கண்டறியப்பட்டு அதை நிறைவேற்ற நகராட்சி சார்பில் நிதி ஒதுக்கி பணிகள் செயல்படுத்தப்படு கின்றன.

    குறிப்பாக நகரில் தூய்மை பணி, குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மழைக்காலம் தொடங்க உள்ளதால் கழிவுநீர் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்ய உத்தரவிடப்பட்டு அதற்கான வேலைகளும் நடந்து வருகிறது. மின் சிக்கனத்தை கருத்தில் கொண்டு அதிக வெளிச்சம் தரக்கூடிய எல்.இ.டி. பல்புகள் தெருக்களிலும், வீதிகளிலும் பொருத்தும் பணி தொடங்கி உள்ளது. நகரில் 1,275 பல்புகள் பொருத்தப்பட உள்ளன என்றார்.

    ×