search icon
என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • குழந்தைகளை தத்தெடுக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் மானகிரி பகுதியில் இளைஞர் நீதி சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வளனார் தத்து வள மையம் செயல்படுகிறது. இங்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் முதல் தத்தெடுப்பு கூட்டம் நடைபெற்று.

    அரசு விதிகளின்படி பதிவுபெற்ற ஒரு குடும்பத்தி னர்களில், குழந்தையை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்து, விண்ணப்பித்த பெற்றோருக்கு, மாவட்ட கலெக்டரால் இக்கூட்டத்தின் வாயிலாக குழந்தை வழங்கப்பட்டது.

    மேலும், சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைகளை தத்தெடுக்க விருப்பம் உள்ளவர்கள் அரசு விதிகளுக்குட்பட்டு வயது மற்றும் ஆவணங்களுடன், வளனார் தத்து வள மையம், மானகிரி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில், துணை இயக்குநர் (சுகாதாரம்) விஜய்சந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் துரைமுருகன், வளனார் தத்து வள மைய நிர்வாகி, சகோதரி.மேரி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பயிர் காப்பீடு வழங்க கோரிக்கை விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அதன்பின் போராட்டக்குழு சார்பில் கோரிக்கை மனு வட்டாட்சி யரிடம் வழங்கப்பட்டது.

    மானாமதுரை

    இளையான்குடி வட்டத்தில் 54 வருவாய் பிரிவுகள் உள்ளன. இவற்றில் கடந்த ஆண்டுக்கான பயிர்காப்பீடு தொகை 12 வருவாய் பிரிவுகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மட்டுமே வழங்க உத்தர விடப்பட்டு உள்ளது.

    இதையடுத்து அனைத்து வருவாய் பிரிவுகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் பயிர்காப்பீடு தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இளையான்குடி ஒன்றி யத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இளையான்குடி வட்டா ட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    அப்போது அவர்கள் அலுவலக வளாகத்துக்குள் சென்று போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால் அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப் பட்டிருந்த போலீசார் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகள் பயிர்காப்பீடு வழங்க கோரி அலுவலக வாயிலில் நின்று முழக்கங்கள் எழுப்பினர்.

    இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வீரபாண்டி, துணைத் தலைவர் அழகர்சாமி, ராமநாதபுரம் வைகை பாசன சங்கத் தலைவர் மதுரைவீரன், தாலுகா சங்கச் செயலாளர் செந்தில் குமார், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஜான் சேவியர் பிரிட்டோ, விவசாயிகள் சங்க பொறுப்பாளர் கருமலை கதிரேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன்பின் போராட்டக்குழு சார்பில் கோரிக்கை மனு வட்டாட்சி யரிடம் வழங்கப்பட்டது.

    • துணை தலைவரின் இரண்டாமிடம் கையெழுத்திடும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டர் நிறுத்தி வைத்தார்.
    • ஒருமித்த கருத்து நிலவாததால் ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெற வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    காரைக்குடி

    கடந்த கிராமப்புற உள் ளாட்சி தேர்தலில் சிவ கங்கை மாவட்டம் சங்கராபு ரம் ஊராட்சியில் தேவி மாங்குடி மற்றும் பிரியதர் ஷினி அய்யப்பன் ஆகியோர் வெற்றி பெற்றதாக சான்றி தழ் வழஙகப்பட்டது பெரும் சர்ச்சைக்குள்ளானது. தேவி மாங்குடி தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, உயர்நீதி மன்றம் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றம தீர்ப்பின்படி தேவிமாங்குடி ஊராட்சி மன்ற தலைவராக பொறுப் பேற்றார்.

    இதனிடையே பொறுப்பு தலைவராக செயல்பட்டு வந்த பாண்டியராஜன் உள் பட சில உறுப்பினர்கள் ஒரு தரப்பாகவும், தேவிமாங் குடி உள்பட சில உறுப்பி னர்கள் ஒரு தரப்பாகவும் செயல்பட்டு வந்தனர். இவர்களிடையே ஒருமித்த கருத்து நிலவாததால் ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெற வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    மேலும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கக்கூட முடி யாத நிலை இருந்து வந்ததும் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே துணை தலைவரின் இரண்டாமிடம் கையெழுத்திடும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டர் நிறுத்தி வைத்தார். அதனை எதிர்த்து துணைத் தலைவர் பாண்டியராஜன் தொடர்ந்த வழக்கு நிலுவை யில் இருந்து வருகிறது.

    கையெழுத்திடும் அதிகாரத்தை நிறுத்தி வைத்த உத்தரவு காலம் முடிவடைந்த நிலையில், தற்போது மழைக் காலம் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், அத்தியா வசிய பணிகளை மேற் கொள்ளவும், ஊழியர்க ளுக்கு ஊதியம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல பணிகளை மேற்கொள்ள ஏது வாக தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994 பிரிவு 203-ன் படி மாவட்ட கலெக்டர் மற்றும் ஊராட்சிகளின் ஆய்வாளரின் அவசரகால அதிகாரங்களின்படி அடிப் படை நிர்வாகம் செயல்பட ஏதுவாக சிற்றுராட்சிகளின் மீது விதிக்கப்பட்ட கடமைக ளில் முதல் நிலை கையொப் பமிட ஊராட்சிமன்ற தலை வருக்கு பதிலாக வட்டார வளர்ச்சி அலுவல ருக்கும் (கிராம ஊராட்சி), இரண்டா மிடம் கையொப்ப மிட ஊராட்சிமன்ற துணை தலைவருக்கு பதிலாக சம்பந்தப்பட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் தற்காலிக மாக அனுமதி அளித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் உத்தர விட்டுள்ளார்.

    • அண்ணா பல்கலைக்கழக கபடி போட்டி நடந்தது.
    • கிட் அண்ட் கிம் கல்லூரி அணி சாதனை படைத்துள்ளனர்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள மானகிரி கிட் அண்ட கிம் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக 16-வது மண்டலத்திற்கான ஆண்கள் கபடி போட்டி நடந்தது. இதில் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இருந்து 21 அணிகள் கலந்து கொண்டன. நாக் அவுட் முறையில் நடந்த போட்டி களில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் அமராவதிபுதூர் ராஜ ராஜன் பொறியியல் கல்லூரி அணியும், புதுக்கோட்டை மதர் தெரசா கல்லூரி அணியும் விளை யாடின. இதில் 15 புள்ளி வித்தி யாசத்தில் வெற்றி பெற்று ராஜ ராஜன் கல்லூரி அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    2-ம் அரையிறுதி ஆட்டத்தில் மானகிரி கிட் அண்ட் கிம் பொறியியல் கல்லூரி அணியும், செந்தூரான் அணியும் விளையாடி கிட் அண்ட் கிம் கல்லூரி அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. பரபரப்பான இறுதி போட்டியில் ராஜ ராஜன் கல்லூரி அணி வெற்றி பெற்று முதலிடம் பெற்றது.

    இதில் கிட் அண்ட் கிம் கல்லூரி அணியும் சிறப்பாக விளையாடி பாராட்டை பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கிட் அண்ட் கிம் கல்லூரி தலைவர் அய்யப்பன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.இதில் கல்லூரியின் இயக்குனர் ஜெயராஜா, முதல்வர் பார்த்தசாரதி, உடற்கல்வி இயக்குனர் பழனியப்பன், பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.
    • மாவட்ட செயலாளர் கலந்து கொண்டார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அ.தி.மு.க. வின் 52 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சி யினர், கொடிகள் ஏற்றி இனிப்புகள் வழங்கி விமரி சையாக கொண்டாடினர்.

    குன்றக்குடியில் பேருந்து நிலையம் அருகில் மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோவில் எதிரே உள்ள அ.தி.மு.க. கொடிக்கம்பத்தில் சிவகங்கை மாவட்டச் செய லாளரும், சிவகங்கை சட்ட மன்ற உறுப்பினருமான பி.ஆர்.செந்தில்நாதன் கட்சி கொடி ஏற்றி வைத்து, இனிப்புகள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் ஏ.வி.நாகராஜன், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட எம்.ஜி.ஆர். இளை ஞர் அணி செயலாளர் பார்த்திபன், பேரவை இணைச் செயலாளர் முருகேசன் உள்ளிட்ட அ.தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நிர்வாகி கள் ஏராளமானோர் கலந்து கொண்டாடினர்.

    • 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.
    • செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி சார்பில் அ.தி.மு.க 52 -ம் ஆண்டு தொடக்க நாள் விழா பொதுக்கூட்டம் புதுவயலில் நடைபெற்றது.மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் நரிவிழி கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.ஒன்றிய செயலாளர்கள் செந்தில்நாதன், மாசான், சுப்பிரமணியன், புதுவயல் பேரூர் செயலாளர் நல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சாக்கோட்டை ஒன்றிய சேர்மன் சரண்யா செந்தில்நாதன் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர்கள் நடிகர் விஜய்கணேஷ், தஞ்சை சேகர் ஆகியோர் பேசினர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசுகையில், நல்லாட்சி தருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற வில்லை. ஜெயலலிதாவின் திட்டங்களான தாலிக்கு தங்கம், மடிக்கணிணி உள்ளிட்ட ரூ.25 ஆயிரம் கோடி மதிப்புள்ள நலத்திட்டங்களை நிறுத்தி விட்டு 12 ஆயிரம் கோடியில் மகளிர் உரிமை தொகை வழங்குவதாக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்றார்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் இளங்கோ, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் வீரசேகர், மாநில பேரவை இணை செயலாளர் சின்னையா அம்பலம், ஊரவயல் ராமு, நகர செயலாளர்கள் மெய்யப்பன், ராமச்சந்திரன் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.
    • கூட்டம் தொடங்கியதும் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை எழுத்தர் முருகன் வாசித்தார்.

    மானாமதுரை

    இளையான்குடி பேரூராட்சிக் கூட்டம் அதன் தலைவர் நஜூமுதீன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் இப்ராகீம், செயல் அலுவலர் கோபிநாத் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கியதும் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை எழுத்தர் முருகன் வாசித்தார். அதன்பின்னர், உறுப்பினர்களின் கேள்விகளுக்குத் தலைவர், செயல் அலுவலர் பதிலளித்தனர்.

    கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இளையான்குடி பேரூ ராட்சியில் போட்டியிட மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க பேரூராட்சிகள் இணை இயக்குநருக்கு கருத்துரு அனுப்பிவைக்கப்படும்.

    தமிழக அரசின் தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல், ஒழுங்குபடுத்துதல் திட்டத்தின் கீழ், பேரூராட்சிப் பகுதியில் 131 தெருவோர வியாபாரிகள் கண்டறியப்பட்ட நிலையில், அவர்களுக்கு வங்கிக் கடன் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்க அடையாள அட்டை வழங்கப்படும்.

    பேரூராட்சிப் பகுதியில் 15-வது நிதிக் குழு மானியத் திட்டத்தில் ரூ.54 லட்சத்தில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு குறைந்த தொகைக்கு வழங்கப்பட்ட ஒப்பந் தப்புள்ளிகளுக்கு ஒப்புதல் அளிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மானாமதுரை தியேட்டரில் விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
    • தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் படம் திரையிடப்படும் என தியேட்டர் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பஸ் நிலையம் அருகே உள்ள தியேட்டரில் இன்று விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் திரையிடப்பட்டது. 9 மணிக்கு முதல் காட்சி திரை யிடப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில் காலை 7 மணி முதலே ரசிகர்கள் அந்த பகுதியில் திரண்டனர். 8.30 மணி அளவில் தியேட்டருக்குள் ரசிகர்கள் சென்றனர். 9 மணிக்கு படம் திரையிடப்பட்டது. அப்போது சவுண்ட் சிஸ்டம் சரியாக வேலை செய்ய வில்லை என கூறப்படுகிறது. இதனால் சிறிது நேரத்திற்கு ரசிகர்கள் கூச்ச லிட்டப்படி இருந்தனர். சவுண்ட் இல்லாமல் படம் ஒடியதால் ரசிகர்கள் வெறுப்படைந்தனர். வெகு நேரமாகியும் தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து ரசிகர்கள் ரகளையில் ஈடுபட தொடங்கினர். நிலைமை கைமீறி செல்வதை உணர்ந்த தியேட்டர் நிர்வாகத்தினர் உடனடியாக காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர். இதையடுத்து ரசிகர்களிடம் வேண்டு கோள் விடுத்து அவர்களை சமாதானப்படுத்தினர். இருப்பினும் ரசிகர்கள் வெளியே வந்த பின்னரும் கூச்சலிட்டப்படி நின்று கொண்டிருந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் படம் திரையிடப்படும் என தியேட்டர் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்தியா சர்வாதிகார நாடாக மாறும் என்று அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
    • இன்னும் 6 மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தெப்பகக் குளம் கீழ்க்கரையில் நடந்தது. ஒன்றிய செ யலாளர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் பெரிய கருப்பன் கலந்து கொண்டு 7 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    முன்னாள் முதல மைச்சரின் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை மாவட்டந்தோறும் முதல்-அமைச்சர் அறி வித்தபடி கொண்டா டப்பட்டு வருகிறது. இந்திய துணை கண்டத்தில் எந்த முதல்வரும் செய்யாத சாதனையை கருணாநிதி செய்துள்ளார். தனது 14 வயது முதல் 94 வயது வரை தமிழக மக்களுக்காக பணியாற்றி உள்ளார்.

    தற்போது அ.தி.மு.க. திராவிடத்தை விட்டு விட்டு பா.ஜ.க.விடம் அடிமை கட்சியாக மாறியுள்ளது. பா.ஜ.க. கொண்டு வந்த மக்கள் விரோத சட்டங்களை அ.தி.மு.க. ஆதரித்தது. தேர்தலுக்காக அ.தி.மு.க. பல்வேறு நாடகங்களை நடத்தி வருகிறது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    மத்திய பா.ஜ.க. ஆட்சியில் விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்தும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் பா.ஜ.க. அரசு உள்ளது. இன்னும் 6 மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

    மோடி ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது. சாதி, மத மோதல்கள், சிறுபான்மை யினர் மீது தாக்குதல் நடந்து வருகிறது.

    2 ஆண்டு தி.மு.க. ஆட்சியல் 85 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற் றப்பட்டுள்ளது. இதனை வீடு தோறும் பிரச்சாரம் செய்ய வேண்டும். 39 தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வேண்டும். இதுவே தி.மு.க.வின் பொற்கால ஆட்சிக்கு அமையும் சான்றாகும். மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்தியா சர்வாதிகார நாடாக மாறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் ஆர்.வி.எஸ். அரங்கசாமி நன்றி கூறினார்.

    • சிவகங்கையில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா நடந்து.
    • எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சிவகங்கை

    அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு தொடக்க விழா சிவ கங்கையில் கொண்டாடப் பட்டது. நகர செயலாளர் ராஜா ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பஸ் நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னார்.

    இதில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் நாக ராஜன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர்கள் சேவியர் தாஸ், பழனிச்சாமி, கோபி, அருள்ஸ்டிபன், செல்வ மணி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்தி ணரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலா ளர் சிவதேவ்குமார், ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் சரவணன்.

    காளையார் கோவில் ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரி கோவிந்தராஜ், சக்கந்தி ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, மாவட்ட கவுன்சிலர் தேவ ராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு தமிழ்செல்வன் மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு இணை செய லாளர் சங்கர்ராமநாதன், அமைப்பு சார அணி மாவட்ட இணை செயலாளர் அழகர்பாண்டி, மாணவ ரணி அன்பு, சக்கந்தி ஊராட்சி மன்ற துணை தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
    • அனைவருக்குமான அரசாக திகழ்ந்து வருகிறது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரளிக்கோட்டையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு 1112 பயனாளிக ளுக்கு ரூ.3.13 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் பயனுள்ள பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகி றார். அரசின் நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு நேரடியாக கிடைக்கும் வகையில் மாதந்தோறும் கடைகோடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. முகாமில் 159 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு 125 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ள்ளது.

    முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழக அரசில் எல்லோருக்கும் எல்லாமும் என்ற தத்துவத் தின் அடிப்படையில் அனை வருக்குமான அரசாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக மக்களை தேடி அரசு என்ற உன்னத நிலை தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

    அதனடிப்படையில் அனைத்து துறை அரசு முதல் நிலை அலுவலர்க ளையும் ஒருங்கி ணைத்து நடைபெற்று கொண்டி ருக்கும் இம்மக்கள் தொடர்பு முகாமின் மூலம் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் விரிவாக மக்களுக்கு எடுத்துரைத்து உள்ளனர்.

    இதனை பொதுமக்கள் கருத்தில் கொண்டு அத்து றையைச் சார்ந்த அலுவலர் களை முறையாக அணுகி அதன் மூலம் பயன்பெற்று தங்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசுந்தரம், ஒன்றிய செயலாளர் பாலசுப்பிர மணியன், ஊராட்சி தலை வர் புவனேஸ்வரி காளி தாஸ், திருப்பத்தூர் யூனியன் சேர்மன் சண்முகவடிவேல், பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணி நாராய ணன், மாவட்ட மாணவர் அணி தி.மு.க. அமைப்பாளர் ராஜ்குமார், திருப்பத்தூர் ஒன்றிய துணை அமைப்பா ளர் கண்ணன் மற்றும் ஒன்றிய, பேரூர், நகர் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட சிறப்பு கணக்கெடுப்பு முகாம் நடந்தது.
    • வேல்முருகன், சண்முகப்பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட் டுத்திட்ட சிறப்பு கணக்கெ டுப்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு நகர்மன்றத் தலைவர் எஸ்.மாரியப்பன் கென்னடி தலைமை தாங்கி னார். ஆணையர் ரெங்கநா யகி முன்னிலை வகித்தார்.

    இதில் மானாமதுரை நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். தமிழக அரசு தூய்மைப் பணியா ளர்களுக்கு பல்வேறு திட் டங்களை செயல்படுத்துவ தற்காக அவர்களுக் கான மேம்பாட்டுத் திட்டத்தை கொண்டுவந்துள்ளது.

    இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான தூய்மைப் பணி யாளர்களை கண்டறிவதற் காக நடைபெறும் கணக்கெ டுப்பு முகாமில், தரைமட்ட கழிப்பறை தொட்டியை தூய்மைப்படுத்தும் பணியா ளர்கள், வாகனங்களில் பணிபுரிவோர், புதை சாக் கடை தூய்மை பணியில் ஈடுபடுவோர், கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையம், பொது கழிப்பிடங்களில் பணிபுரி யும் தூய்மைப் பணியாளர் களை சேர்க்க ஆலோசனை வழங்கப்பட்டது.

    இந்தக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் ஊழியர்க ளுக்கு அடையாள அட்டை களை நகர்மன்றத் தலைவர் மாரியப்பன் கென்னடி வழங்கினார். கணக்கெடுப் பில் ஈடுபடும் ஊழியர்களிடம் உரிய விபரங்களை தூய்மை பணியாளர்கள் வழங்கி அவர்களுக்கு ஒத்து ழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

    முகாமில் நகராட்சிப் பொறியாளர் முத்துக்குமார், துப்புரவு ஆய்வாளர் பாண் டிச்செல்வம், சுகாதார மேற்பார்வையாளர்கள் சிவ ராணி, பிரபு, கார்த்தி, ஹரிணி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் காயத்ரி, நகர்மன்ற உறுப்பி னர்கள் வேல்முருகன், சண்முகப்பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×