search icon
என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • கண்மாய்க்குள் நிரம்பி கிடக்கும் மதுபாட்டில்களால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் விரைவில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவில் உள்ளது பணிக்கனேந்தல் கிராமம். இங்குள்ள கண்மாயின் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு வருபவர்கள் மது குடித்து விட்டு பாட்டில் களை கண்மாய்க்குள் வீசி செல்கின்றனர். பாட்டில் களை வீசி எறியும் போது அவை உடைந்து கண்மாய் முழுவதும் கண்ணாடி துகள்கள் சிதறிக் கிடக்கின் றன. இதனால் கண்மாய் அழியும் நிலை உள்ளது.

    கண்மாயில் நிரம்பிக் கிடக்கும் பாட்டில் துகள் களை அகற்றவும், டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யவும் வலியுறுத்தி பணிக்கனேந்தல் கிராம மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.

    இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரபாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆண்டி, அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்செல்வி, மகேஸ்வரி, அருணா, பிச்சை, ராமச்சந்தி ரன் ஆகியோர் கூறியதா வது:-

    பனிக்கனேந்தல் கிராமம் வானம் பார்த்த பூமியாக உள்ளதால் மழை பெய்து கண்மாய் நிரம்பினால்தான் விவசாயம் செய்யும் நிலை உள்ளது.இங்குள்ள மூன்றாம்குளம், இரண்டாம் குளம் ஆகிய கண்மாய் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் உள்ளது.

    இந்த கடைகளுக்கு வரும் மது பிரியர்கள் கண்மாய் கரையிலேயே அமர்ந்து குடித்து விட்டு மது போதையில் பாட்டில்களை கண்மாய்க்குள் வீசி எறிந்து செல்கின்றனர். இதனால் கண்மாய் முழுவதும் கண்ணாடி துகள்கள் சிதறி கிடக்கின்றன.

    டாஸ்மாக் கடைகள் இருப்பதால் அந்த பகுதியில் பள்ளி மாணவிகளும் செல்ல முடியாத நிலை உள்ளது. சமூக விரோத செயல்களும் அடிக்கடி நடக்கின்றன. இதனால் இந்த கிராமத்திற்கு தனியாக வர பொதுமக்கள் அஞ்சு கின்றனர். பகலிலேயே இந்த பகுதியில் நடமாட முடியாத அளவுக்கு போதை ஆசாமிகள் சுற்றி திரிகின்ற னர். பனிக்கனேந்தல் கிராமத்தில் மூன்றாம்குளம், இரண்டாம் குளம், சன்னதி யேந்தல், பனிக்கனேந்தல் ஆகிய 4 கண்மாய்கள் உள்ளது. மது பிரியர்களின் அட்டகா சத்தால் கண்மாய் கள் பாழாகி விவசாயம் அழியும் நிலை ஏற்பட்டு உள்ளதுடன் பொது மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழலும் உள்ளது.

    டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் விரைவில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.  

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற்றுலா பயணம் சென்றனர்.
    • கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உலக சுற்றுலா நாள் விழாவை முன்னிட்டு சுற்றுலாத்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணம் மேற்கொண்டனர். இதனை கலெக்டர் ஆஷா அஜித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசிய தாவது:-

    முதலமைச்சர் , பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருவது மட்டுமின்றி, அவர்களின் உடல் நலம் மற்றும் மனநலம் ஆகிய வைகளை சீராக வைத்துக் கொள்வ தற்கெனவும், பல்வேறு சிறப்பு நடவடிக் கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி யுள்ளார். அந்தவகையில் சிவகங்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்பு ணர்வு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு சுற்றுலாவில், சிவகங்கை அருங்காட்சி யகம், கீழடி அருங்காட்சி யகம், அகரம், கொந்தகை அகழ்வாராய்ச்சி மையம், இது தவிர திருமலை மற்றும் இடைக்காட்டூர் தேவாலயம் ஆகிய இடங்களுக்கு மாணவ, மாணவியர்கள் அழைத்துச் செல்லப்படு கின்றனர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ள வகையில் இந்த ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா மிகவும் சிறப்பாக அமைகின்ற வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி உள்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பூவந்தி மின்வாரிய அலுவலகம் பாழடைந்து கிடக்கிறது.
    • மின்வாரிய அலுவலகத்தை மாற்றி புதிய கட்டிடத்தில் இயங்க செய்ய வேண்டும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா உள்ளது பூவந்தி. இங்குள்ள மின்வாரிய அலுவலகத்தின் சுவர்களில் சிமெண்ட் பூச்சு கள் உடைந்து பாழடைந்து காணப்படுகிறது. இந்த அலுவலகத்தில் மின் இணைப்பும் சரியில்லாமல் உள்ளது.

    இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் அய்யம் பாண்டி கூறியதாவது:-

    பூவந்தி மின்வாரிய அலுவலகம் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதை சரி செய்ய வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளேன்.

    பூவந்தியில் உள்ள மின்வாரிய அலுவலகம் இப்பகுதியில் உள்ள சுமார் 5 ஆயிரத்து 500 இணைப்பு களுக்கு சேவையாற்றி வரு கிறது. இந்த நிலையில் மின்வாரிய அலுவலகம் பழுதடைந்து பாழடைந்து கிடக்கிறது. இந்த அலுவலகத்தில் உள்ள மின்விளக்குகள் எரிவது இல்லை. இதனால் அலுவலகம் இருளில் மூழ்கி கிடக்கிறது. இங்கு மின்வாரிய ஊழியர்கள் பற்றாக்குறையும் உள்ளது.வயர்மேன் 5 பேர், உதவி யாளர் 5 பேர், போர்மேன் 1, கமர்சியல் அசிஸ்டென்ட் ஒருவர், ஐ.ஏ. என ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன.

    இதன் காரணமாக முழுமையாக சேவையாற்ற முடியாமால் இங்குள்ள ஊழியர்கள் திணறி வருகின்றனர். இதனால் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மின்தடை ஏற்படும்போது ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பாதிப்பை உடனடியாக சரி செய்ய முடியவில்லை என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். சாரல் மழைக்கே மின்சாரம் துண்டிக்கப்படு கிறது. இந்த பிரச்சினைகளை உடனடியாக சரி செய்து மின்வாரிய அலுவலகத்தை மாற்றி புதிய கட்டிடத்தில் இயங்க செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மழை வேண்டி கறி விருந்து நடந்தது.
    • இதில் அனைத்து மதத்தினர் பங்கேற்றனர்.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் தாலுகா பருத்திக் கண்மாயில் புனித மரியாயி கல்லறை உள்ளது. இந்த கல்லறை கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் 23-ந் தேதி திருப்பலி பூஜையும் கறிவிருந்து அன்னதானமும் நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு நேற்று சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கறிவிருந்துடன் கூடிய அன்னதானம் நடைபெற்றது. இதில் பருத்திகண்மாய் மற்றும் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டார்கள்.

    சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் மரியாயி என்ற இளம் பெண் அப்பகுதியில் இயற்கை வைத்தியம் செய்து வந்தார்.இவரது சிகிச்சை முலம் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்தார்கள். அவர் இறந்த பின்னர் அவரது சேவையை நினைவு கூறும்வகையில் சிவகங்கை அரசர் மாமன்னர் மருது பாண்டியர்கள் அப்பகுதியில் கல்லறைகட்ட இடம் கொடுத்தார்கள். கிராமமக்கள் சிறிதாக கோயில் அமைத்து கல்லறை அமைத்துள்ளார்கள் .அவரது நினைவைப் போற்றிடும் வகையில் ஒவ்வொரு ஆண்டு புரட்டாசி 23-ந் தேதி மழைபெய்யவும் ,உலகமக்கள் நோயின்றி நலமுடன் வாழ்வதற்காக திருப்பலி மற்றும் அன்னதானத்தை கிராமமக்கள் சார்பில் நடத்தி வருகிறார்கள்.இந்த ஆண்டு நேற்று நடைபெற்றது. இந்த விழா ஏற்பாடுகளை பருத்தி கண்மாய் கிராம மக்கள் செய்திருந்தார் கள்

    • காரைக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 14-ந்தேதி நடக்கிறது.
    • வேலை வாய்ப்பு பெற்று பணி நியமனம் பெறும் பதிவு தாரர்களுடைய வேலை வாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் 3 சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 2-வது தனியார் வேலை வாய்ப்பு முகாம் காரைக்குடி யில் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியி டங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இம்முகாமில் 5-ம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

    இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்ப முள்ள வர்கள் உரிய ஆவணங்க ளுடன் https://bitly/svgjobfair1 என்ற இணைப்பில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்க உள்ள தனியார் துறை நிறுவனங்கள் https://b itly/svgempreg என்ற இணைப்பில் பதிவு செய்வது அவசியம்.

    மேலும் www.tnprivatejobs.tn.gov.in என்ற தனியார் வேலைவாய்ப்பு இணை யத்திலும் பதிவு செய்யலாம். வேலைவாய்ப்பு தொடர் பான பல்வேறு தகவல் களை பெற SIVAGANGAI EMPLOYMENT OFFICE என்ற Telegram channel—ல் இணைந்து பயன்பெற லாம். இம்முகாமில் வேலை வாய்ப்பு பெற்று பணி நியமனம் பெறும் பதிவு தாரர்களுடைய வேலை வாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது.

    மேலும் இந்த முகாமில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி சேர்க்கை விண்ணப்பம், திறன் பயிற்சி களுக்கான விண்ணப்பம், வேலை வாய்ப்பற்ற இளை ஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் ஆகியவை வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டி பரிசு வழங்கினார்.
    • பாராட்டுச்சான்றிதழ்களை கலெக்டர் ஆஷாஅஜீத் வழங்கினார்.

    சிவகங்கை

    தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், சிவகங்கை மாவட்டத்தில் அண்ணா, பெரியார் பிறந்த நாளையொட்டி பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டன.

    அண்ணா பிறந்த நாள் ேபச்சுப்போட்டியில் மரக்காத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ஸ்ரீலக்ஜனா முதல் பரிசையும், சூராணம் புனித ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி மோனிகாஸ்ரீ 2-வது பரிசையும், பூவந்தி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி சிவதாரணி 3-ம் பரிசையும் பெற்றனர்.

    அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சிறப்பு பரிசை சிவகங்கை மருது பாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி துர்காதேவி, திருக்கோஷ் டியூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மகா லெட்சுமி ஆகியோர் பெற்றனர்.

    பெரியார் பிறந்த நாள் பேச்சு போட்டியில் காரைக்குடி எல்.எப்.ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி மாணவர் முகிலேஸ்வரன் முதல் பரிசையும், தி.புதூர் ஆக்ஸ்வர்ட் பள்ளி மாணவி நவ்வி இளங்கொடி 2-வது பரிசையும், தேவகோட்டை புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சவுமியா 3-ம் பரிசையும் பெற்றனர்.

    அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சிறப்பு பரிசினை மரக்காத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி கோபிகா, திருப்பத்தூர் நா.ம.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹசினா ஆகியோர் பெற்றனர்.

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவி களுக்கு முதல் பரிசு ரூ.5ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2ஆயிரம், சிறப்பு பரிசு ரூ.2ஆயிரம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை கலெக்டர் ஆஷாஅஜீத் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர் நாகராசன், தமிழ் வளர்ச்சித் துறை பணியாளர்கள் வெண்ணிலா, சிராஜுதீன், முனியசாமி, கார்த்திகை ஆகியோர் உடனிருந்தனர்.

    • கிராம ஊராட்சிகள் சுயமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • சிவகங்கை கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    சிவகங்கை

    சிவகங்கையில் மாவட்ட ஊராட்சி மன்றத்தலை வர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. 12 ஊராட்சி மன்றத்தலை வர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர். கூட்டத்தில் ஒருமனதாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

    மாவட்டத்தில் உபரி நிதிகளை உடனே ஊராட்சி பணிகளுக்கு கலெக்டர் ஒதுக்க வேண்டும். பஞ்சா யத்து ராஜ் சட்டம் 1994-ன்படி சிவகங்கை மாவட் டத்தில் கிராம ஊராட்சிகள் சுயமாக செயல்பட மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி மன்றத்தில் ஊராட்சி செயலாளர் பணி நியமனம் செய்ய ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்க நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவை நடை முறைப்படுத்த வேண்டும்.

    ஜல்ஜீவன் திட்டம் தொடர்பாக அந்தந்த கிராம ஊராட்சிகளில் ஒப்பந்த புள்ளிகள் கோராமல் ஊராட்சி ஒன்றியங்களில் ஒப்பந்தபுள்ளிகள் கோரப்ப டுகிறது. இதனால் கிராம ஊராட்சியின் அதிகாரம் பறிக்கப்பட்டது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட 10-க்கும் மேற்பட்ட தீர்மா னங்களை முதல் -அமைச்ச ரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப் பட்டது.

    • திருப்பத்தூரில் மருதுபாண்டியர்கள் குருபூஜை நடக்கயிருப்பதை முன்னிட்டு பாதுகாப்பு குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
    • மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இடமான நினைவுத்தூண் (ஸ்தூபி) மற்றும் மணிமண்டபம் ஆகிய பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சுதந்திர போராட்ட தியாகிகளான மருது பாண்டியர்களின் குருபூஜையை முன்னிட்டு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்த் ஆய்வு மேற் கொண்டார்.

    வருடந்தோறும் அக்டோ பர் மாதம் 24 -ந்தேதி முதல் மருது பாண்டி யர்களின் குருபூஜை தினத்தை அரசு விழாவாக கடைபிடிக்கப்பட்டு வருகி றது. அதன் அடிப்படையில் திருப்பத்தூர் நகரில் பஸ் நிலையம் எதிரே அமைந் துள்ள மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இடமான நினைவுத்தூண் (ஸ்தூபி) மற்றும் மணிமண்டபம் ஆகிய பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் அன்றைய தினங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அமைச்சர்கள், அனைத்து கட்சி பிரமு கர்கள், முக்கியஸ்தர்கள் போன்ற பலரும் ஆயிரக் கணக்கானோர் வருகைதர இருப்பதால் அது குறித்த பாதுகாப்பு மற்றும் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் குறித்த முன் ஏற்பாடுகள் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வில் திருப்பத் தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்ம நாதன், நகர் காவல் ஆய்வாளர் கலைவாணி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட இறகுபந்து சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
    • அமைச்சர் பெரியகருப்பன் பரிசு வழங்கினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட இறகுபந்து கழகம் சார்பில் மாவட்ட ஜூனியர், சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டிகள் பிருந்தாவன் உள் விளை யாட்டரங்கில் நடை பெற்றது.போட்டிகளை காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை தொடங்கி வைத்தார். இதில் மாவட்டம் முழு வதும் இருந்து 80-க்கும் மேற்பட்ட அணிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்க னைகள் கலந்து கொண்ட னர். போட்டிகள் 9 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட வர்கள் என பல்வேறு பிரிவு களில் ஆண், பெண் தனி நபர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் நடத்தப்பட்டன.பரிசளிப்பு விழாவில் மாவட்ட தலைவர் ராம கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அபுதாஹிர் வரவேற்றார். மாவட்ட செயலர் பாரூக் முன்னிலை வகித்தார்.

    அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். இதில் தமிழ்நாடு அணி சார்பில் தேசிய போட்டியில் பங்குபெற்ற மகரிஷி பள்ளி மாணவி ராஜராஜேஸ்வரிக்கு ரொக்க பரிசு வழங்கி கவுரவித்தனர். வெற்றி பெற்றவர்கள் மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்க தாகும். மாவட்ட சேர்மன் ஹரிதாஸ் நன்றி கூறினார்.

    • செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் தனித்திறன் விழா நடந்தது.
    • போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    காரைக்குடி

    காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளி யும், லயன்ஸ் கிளப் காரைக்குடி சிட்டி இணைந்து மழலையர் விழா நடத்தியது. இந்த போட்டிக்கு பள்ளி தாளாளர் சத்தியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். துணை முதல்வர் சுபாஷினி அனைவரையும் வரவேற்றார்.

    பள்ளியின் நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்தியன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக லயன்ஸ் கிளப் காரைக்குடி சிட்டி மாவட்ட தலைவர் சசிக்குமார் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் பேராசிரியர் ஜானகிராமன், லயன்ஸ் கிளப் மாவட்ட ஒருங் கிணைப்பாளர் பாதம்பிரியன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் பள்ளியின் முதல் வர் சங்கர சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    • நடப்பாண்டில் விவசாய பயிர்கடன் ரூ.17 ஆயிரம் கோடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மித்ராவயல் கால்நடை கிளை நிலையத்தில் தரம் உயர்த்தப்பட்ட பார்வை கால்நடை மருந்தகத்தினை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி மேம்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக விவ சாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத் திடும் பொருட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகிறது. தற்போது இயற்கை விவசாயம் பெரு மளவில் மதிக்கப்பட்டு போற்றப்பட்டும் வருகிறது.

    மேலும் விவசாயிகளின் நண்பனாக திகழ்ந்து வருவது கால்நடைகளாகும். கால் நடைகளின் உடல்நலத்தினை சரிவர பேணிக்காப்ப தற்கென தமிழக அரசால் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

    அதன்படி கால்நடை களுக்கான மருத்துவ முகாம்கள் மற்றும் கால்நடை மருந்தகங்கள், கால்நடைக ளுக்கான காப்பீடுகள் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் கால்நடைகளை பேணிப்பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு வங்கி கடனுதவி களும் வழங்கப்பட்டு வருகிறது. அதில் நடப் பாண்டில் கூட்டுறவு துறையின் சார்பில் 1 லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கிட இலக்கு நிர்ணயித்துள்ளார்கள். அதில் விவசாய கடன் மற்றும் பயிர் கடனுதவி களுக்கு மட்டும் ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட உள்ளது.

    அதேபோன்று கால்நடை வளர்ப்போர்களுக்கு பயனுள்ள வகையில் ரூ.14 ஆயிரம் வட்டியில்லா கடனு தவியாகவும் வழங்கப்படு கிறது. இத்திட்டங்களை விவசாயிகள் முறையாக அறிந்து கொள்வதற்கென கிராமப்புறப்பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த ப் பட்டும் வருகிறது.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்நிகழ்ச்சியில், தேவ கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சரண்யா, கால்நடைப் பரா மரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர்(பொ) கார்த்திகேயன், உதவி இயக்குநர் (காரைக்குடி) பாலசுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் தென்னவன், ஆவின் பால்வள தலைவர் சேங்கைமாறன், மித்ராவயல் ஊராட்சி மன்ற தலைவர் ஐஸ்வர்யா, காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேவகோட்டையில் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
    • ஆலோசனை கூட்டத்தில் நகர் மன்ற தலைவர் வலியுறுத்தினார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகரில் டெங்கு தடுப்பு குறித்து அதிகாரிகளுடனுனான ஆலோசனை கூட்டம் நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் ஆணையாளர் பார்கவி முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் பேசியதா வது:-

    பஸ் நிலையம், அம்மா உணவகம், பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காலை மாலை வேளைகளில் நிலவேம்பு கசாயம் வழங் கப்பட வேண்டும். டெங்கு அறிகுறி உள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காலியிடங்களில் குப்பைகள், சீமை கருவேல மரங்களை அகற்ற இடத்தின் உரிமையாள ருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் சீமை கருவேல மரங்கள் இருந்தால் உடனே அகற்றப்பட வேண்டும். பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கியின் மூலம் தெரியப்படுத்த வேண் டும். அந்தந்த வார்டுகளில் தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளும்போது வார்டு கவுன்சிலர்களிடம் பணியா ளர்கள் கையொப் பம் பெற்று வர வேண்டும். நகரில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ள போதிலும் மேலும் பரவாமல் தடுக்க மருத்துவர்கள் அடிக்கடி சிறப்பு முகாம்கள் நடத்தி டெங்கு தடுப்பு கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

    மேலும் தடுப்பு நடவ டிக்கையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட தொற்று நோய் தடுப்பு வல்லுனர் டாக்டர் கிருஷ்ண வேணி, வட்டார மருத்துவர் தினேஷ், நகர சுகாதார அலுவலர் ரவிச்சந்திரன், வட்டார சுகாதார மேற் பார்வையாளர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் பாண்டி ஆதிநாராயணன் மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    ×