search icon
என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • காளையார் கோவிலில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • புனித மைக்கேல் கல்லூரி நிறுவனர் நினைவு நாளை முன்னிட்டு நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை காளையார் கோவில் புனித மைக்கேல் கல்லூரியின் நிறுவனர் மைக்கேல் 18 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடை பெற்றது.

    இதில் பெரிய மாட்டு வண்டியில் 8 ஜோடிகள், சின்ன மாட்டு வண்டியில் 15 ஜோடிகள் கலந்து கொண்டன. இதில் பெரிய மாட்டு வண்டியினை புனித மைக்கேல் கல்வில்குழும தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் தொடங்கி வைத்து பரிசுகளை வழங்கினார். சின்ன மாட்டு வண்டி பந்தயத்தை தபிழ்நாடு பார்க்கவகுல சங்க மதுரை மாவட்ட தலைவர் கொடியேற்றி தொடங்கி வைத்து பரிசுகளை வழங்கினார்.

    முதல் பரிசு 25 ஆயிரம் இரண்டாம் பரிசு ரூ.20,000 மூன்றாம் பரிசு 15 ஆயிரம் நான்காம் பரிசு பத்தாயிரம் வழங்கப்பட்டது. நிகழ்சி பரிசுகளை ஆனந்தராஜ், கண்ணன், லூயிஸ் ராஜா, சபரிராஜன், துரைமுத்து, ராமன், மகேஸ்வரன் ஆகியோர் வழங்கி கலந்து கொண்டனர். விழா ஏற்பாடு களை ஜான் சந்தியாகு, மோசஸ் ஏற்பாடு கள் செய்தனர்.

    • திருப்பத்தூரில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • பூ மற்றும் பழங்கள் உள்ளிட்ட வளைகாப்பு பொருட்கள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி வட்டார பகுதிகளில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் சமூக நலம் மகளிர் உரிமைத்துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு அமைச் சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை வகித்து கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசின் வளைகாப்பு பொருள்கள் மற்றும் தனது சார்பில் சேலை, பாதாம் பருப்பு, ஹார்லிக்ஸ், பேரிச்சம்பழம் உள்ளிட்ட ஊட்டச்சத்து பொருட்கள் தொகுப்பினை வழங்கி வாழ்த்தினார்.

    அப்போது அவர் பேசுகையில், கர்ப்பிணி தாய்மார்கள் அனைவருக்கும் இவ்விழா வின் மூலம் 5 வகையான கலவை சாதம், வளையல்கள், பூ மற்றும் பழங்கள் உள்ளிட்ட வளை காப்பு பொருட்கள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

    திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி வட்டாரத் திற்குட்பட்ட மொத்தம் 200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

    கர்ப்பிணி தாய்மார்கள், கர்ப்பகால மாதம் முதல் தொடங்கி 10 மாதமும் அரசு மருத்துவமனையில் பதிவு செய்து சரியான மாதாந்திர பரிசோதனை மேற்கொண்டு ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுப்பது டன் தானும் ஆரோக்கியமாக இருந்திட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்.மணிபாஸ்கரன், தேவ கோட்டை வருவாய் கோட் டாட்சியர் பால்துரை, சுகாதார துணை இயக்குநர் விஜய்சந்திரன் ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவர் முத்து மாரியப்பன், திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சண்முகவடிவேல், பேரூ ராட்சி தலைவர் கோகிலா ராணி நாராயணன், துணைத்தலைவர் கான்முக மது, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கோமதி சண்முகம், ராஜேஸ்வரி சேகர், சரண்யாஹரி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு- இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் எம்.எல்.ஏ.க்கள் செந்தில்நாதன், மாங்குடி பங்கேற்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை வட்டார போக்குவரத்து துறை சார் பில், அனைத்து வகையான வாகனங்களின் ஓட்டுனர்க ளுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற் றும் இலவச கண் சிகிச்சை முகாம், சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்திலுள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வ.மோகனச்சந்திரன் மற்றும் சிவகங்கை சட்டமன்ற உறுப் பினர் பிஆர்.செந்தில்நாதன், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்து, பார்வை யிட்டனர். அப்போது வட்டா ரப் போக்குவரத்து அலுவ லர் மூக்கன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம் மற்றும் கரைக் குடி மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்நிகழ்ச்சியில், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாக னங்கள் மற்றும் அரசு பேருந்துகள் ஆகியவைக ளின் ஓட்டுனர்க ளுக்கு, சாலை பாதுகாப்பு தொடர் பான பல்வேறு விழிப்பு ணர்வு கருத்துக்கள் எடுத்து ரைக்கப்பட்டு, அவர்களின் நலன் காக்கின்ற வகையில், ரத்த அழுத்த பரிசோதனை, இலவச கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத் துவ பரிசோதனைகள் இம் முகாமில் மேற்கொள்ளப் பட்டது.

    இதில், மாவட்டம் முழு வதும் 500-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பங்கேற்றனர். இம்முகாமினை, சிவ கங்கை வட்டார போக்குவ ரத்து அலுவலகம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தியது.

    • குடிசைத்தொழில் மூலம் முதுநிலை பட்டதாரி வாலிபர் செயற்கை விறகு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
    • சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளார்.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்தவர் ராஜேஷ். எம்.இ., எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் பள்ளியில் படிக்கும் பொழுதே பின்தங்கிய சிவ கங்கை மாவட்டத்தில் தொழிற்சாலைகள் துவங்க வேண்டும் என்று விரும்பி னார். அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் சிறு தொழில் துவங்கி இளைஞர்க ளுக்கு வேலைவாய்ப்பு தரவேண்டும் என்று திட்ட மிட்டார். இதற் காக கொல்லங்குடி அழகாபுரி அருகே உள்ள மோர்குழி கிராமத்தை தேர்வு செய்தார்.

    பின்பு தொழில் நிறுவனங்கள், வல்லுனர்களுடன் ஆலோ சித்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஏராளமாக வளர்ந்து பயனற்ற நிலை யில் உள்ள வேலிக்கருவை மரங்களை செயற்கை விற காக தயாரிக்கும் முயற்சியில் இறங்கி மாவட்ட தொழில் மையத்தை நாடினார். அபா் போதைய கலெக்டர் ஜெய காந்தன் மூலம் மின்கட்டண சலுகை, மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற்றார்.

    அதனைக்கொண்டு 2 கொதிகலன் எந்திரங்களை வாங்கினார். இந்த செயற்கை விறகானது கருவேல மரம், முந்திரி, கடலை, நெல்பதர் ஆகியவற்றை நன்றாக தூளாக்கி தயாரிக்கப்படுகிறது. எந்த ரசாயன கலவையும் சேர்ப்பதில்லை. இதனால் இந்த செயற்கை விறகை பயன்படுத்துவதால் எத்த கைய உடல் பாதிப்பும் ஏற்படு வதில்லை. இதற்கு சுற்றுப்பு றச்சூழல் அனுமதியும் மாசுக் கட்டுபாட்டு வாரியத்தின் அனுமதியும் பெற்றுள்ளார்.

    இந்த செயற்கைவிறகு 400 டிகிரி வெப்பம் தாங்குவதாக அமைந்துள்ளது. இவர் இந்த செயற்கை விறகை காரைக் குடி, புதுக்கோட்டையில் உள்ள ஆவின் நிறுவனங்க ளுக்கு அனுப்பி வருகிறார். இது தவிர தூத்துக்குடி, நெல்லை, ராஜபாளையம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கிறார். திண்டுக் கல் டான்பெட் நிறுவனத்திற் கும் இந்த செயற்கை விறகு அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்த குடிசைத்தொழிலில் நேரடியாக 20 பேரும், மறை முகமாக 150 முதல் மொத்தம் 200 நபர்கள் வேலை பார்த்து பயனடைந்து வருகிறார்கள். ஒரு டன் செயற்கை விறகு ரூ.7000-க்கு வாங்கப்படுகிறது. தினசரி 20 டன் உற்பத்தி செய்து வருகிறார். இதை விரி வுபடுத்துவது குறித்தும் திட்ட மிட்டு வருகிறார்.

    இந்த செயற்கை விறகை எதிர்கால திட்டத்தில் ஓட்டல் களுக்கு அனுப்பவும், அதற் கான நவீன அடுப்பு தயாரிக் கும் திட்டத்திலும் ஈடுபட்டுள் ளார். இதன் மூலம் சமையல் எரிவாயு பயன்படுத்துவது குறையும். செயற்கை விறகை பயன்படுத்துவதால் எரிபொ ருள் செலவு மிச்சமாகும். புகைஏற்படாது, சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்படும். இதையும் எதிர்காலத்தில் விரிவுபடுத்த உள்ளேன் என்று ராஜேஷ் கூறினார்.

    இத்தகைய செயற்கை விறகு தயாரிப்பு குறித்து வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு இத்தொழில் துவங்குவது குறித்து ஆலோசனைகளை வழங்க உள்ளேன். எனவே இதற்கு அதிகாரிகளும், பொதுமக்களும் ஆதரவு தர வேண்டும் என்றார்.

    முதல்தலைமுறை தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் இவரது பணியினை ஊக்கப்ப டுத்தும் வகையில் 2018-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் விருதினையும், 2023-ம் ஆண்டில் டெட்கோ விருதி னையும், சிறுகுறு தொழில் சங்கத்தின்பல்வேறு விருதுக ளையும் பெற்றுள்ளார் என் பது குறிப்பிடத்தக்கது.

    • பள்ளி கூடுதல் கட்டிடம் திறக்கப்பட்டது.
    • தலைமை ஆசிரியை ஜீவா, ஒன்றிய கவுன்சிலர் வைத்தீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். போதிய இட வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது ரூ.29 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் கூடுதல் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் கட்டிடத்தை திறந்து வைத்தனர். தலைமை ஆசிரியை ஜீவா, ஒன்றிய கவுன்சிலர் வைத்தீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஷேக் அப்துல்லா அவுலியா தர்கா சந்தனக்கூடு திருவிழா நடந்தது.
    • இதில் திரளானோர் பங்கேற்பார்கள்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அமைந்துள்ள பிரான்மலை சேக் அப்துல்லா அவுலியா தர்கா சந்தனம் பூசும் விழா மிகவும் பிரசித்தி பெற்ற தாகும்.

    பிரான்மலையில் 2500 அடி உச்சியில் அமைந் துள்ள ஷேக் அப்துல்லா ஒலியுல்லா அவர்களின் அடக்கஸ்தலம் மற்றும் பிரான்மலை அடி வாரத்தில் உள்ள தோப்பு தர்காவிலும் அனைத்து மதங்களைச் சேர்ந்த வர்களும் நேர்த்திக் கடன் வைத்து தங்கள் பிரார்த்த னைகளை கந்தூரி எனப்படும் சமபந்தி விருந்து அளித்து நிறைவேற்றுவது வழக்கம்.

    இந்த தர்ஹாவில் ஆண்டு தோறும் (ரயியுல் அவ்வல் பிறையில்) சந்தனம் பூசும் விழாவிற்காக கொடி யேற்றம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சந்தனம் பூசும் விழா விற்காக மலையடிவாரத்தில் துவா ஓதப்பட்டு கொடி யேற்றம் நடைபெற்றது.

    முன்னதாக 2500 அடி உயரத்தில் உள்ள பிரான் மலை உச்சியில் உள்ள ஷேக் அப்துல்லா ஒலியுல்லாஹ் தர்காவிலும் கொடியேற்றம் நடைபெற்றது.

    வருகிற 6-ந் தேதி சந்தனம் பூசும் விழா நடக்கிறது. அன்று இரவு பிரான்மலை 5 ஊர் கிராமத் தார்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் சுற்று வட்டார பெரியோர்கள் முன்னிலையில் சந்தனக் குடம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு 2500 அடி உயரமும் 7 மைல் தூரமுள்ள மலை உச்சியை சென்ற டைந்து 7-ந் தேதி அதிகாலை மலைமீது உள்ள தர்ஹாவில் மதநல்லிணக்க சந்தனம் பூசும் விழா நடைபெற உள்ளது. இதில் திரளானோர் பங்கேற்பார்கள்.

    • 100 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
    • இதுபோன்ற அதிரடி சோதனை தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தேவகோட்டை

    நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டு மாணவி ஒருவர் பலியானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவகங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    அந்தவகையில், தேவ கோட்டை நகரில் உணவு பாதுகாப்பு அதிகாரி வேல் முருகன் தலைமையில் உத வியாளர் மாணிக்கம் மற்றும் நகராட்சி பணியாளர் கள் நகரில் உணவகங்கள் மற்றும் சாலையோர கடைக ளில் திடீர் சோதனை நடத்தி னார்கள்.

    இதில் கெட்டுப்போன 100 கிலோ கோழி இறைச்சி, பலமுறை பயன்படுத்தப் பட்ட 30 லிட்டர் சமையல் எண்ணெய் அதிகளவு ரசா யன பொடி கலந்த உணவு கள் பறிமுதல் செய்தனர் மேலும் இரண்டு கடைக ளுக்கு தலா ரூ.5,000 வீதம் ரூ.10,000 அபராதம் விதித்தனர். சிறிய பெட்டிக்கடை முதல் டிபார்ட்மெண்ட் ஸ்டோர், உணவகங்கள் ஆகியவற்றில் தடை செய்யப்பட்ட சுமார் 50 கிலோவுக்கு மேற் பட்ட பாலித்தீன் பைகளை நகராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். இதுபோன்ற அதிரடி சோதனை தொட ரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மகளிர் உரிமை தொகைக்கு மேல்முறையீடு செய்ய முடியாமல் பெண்கள் தவித்து வருகின்றனர்.
    • பெண்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    மானாமதுரை

    மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு வந்த குறுஞ் செய்தியை வைத்து 30 நாட்களுக்குள் தாலுகா அலுவலகங்கள், இ-சேவை மையங்களில் மேல்முறையீடு செய்யலாம் எனவும், ஏற்கனவே விண்ணப் பிக்காதர்களும் மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்தது.

    இந்த நிலையில் ஏராளமான பெண்கள் மானாமதுரை தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். அங் குள்ள இ-சேவை மையத் தில் தங்களது மேல்முறையீடு விண்ணப்பங்களை அளித்தனர். அப்போது அலுவலர்கள் அந்த மேல் முறையீடு செய்பவர்களின் விண்ணப்பங்களை பதிவு செய்தபோது அவர்களின் விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வந்தது.

    தொடர்ந்து அவர்களின் மேல்முறையீடு விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியவில்லை. இதனால் இ-சேவை மைய அலுவலர்களும் மேல்முறையீடு செய்ய வந்த பெண்களும் குழப்பம் அடைந்தனர்.

    இதே குழப்பத்தின் காரணமாக இளையான்குடி தாலுகாவிலும் மேல்முறையீடு செய்ய வந்த பெண்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நிராகரிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்த பின்னரும் இணையத்தில் பரிசீலனையில் இருப்பதாக தகவல் உள்ளதால் மீண்டும் பரிசீலனை ஏற்கப்பட்டு தங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்குமா? அல்லது கட்டாயம் மீண்டும் மேல்முறையீடு செய்ய வேண்டுமா? என்ற குழப்பத்தில் பெண்கள் தவித்து வருகின்றனர்.

    • சிவகங்கையில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
    • மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் தலைமையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை, மாற்றுத்திறனா ளிகளுக்கான உபகர ணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி, பொது மக்களிட மிருந்து 577 மனுக்கள் பெறப்பட்டு தகுதியுடைய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில், வேளாண்மைத்துறையின் சார்பில் மானாமதுரை, திருப்புவனம் வட்டத்திற்குட் பட்ட 4 பயனாளிகளுக்கு ரூ.10,084 மதிப்பீட்டிலான மானியத்தொகையுடன் கூடிய வேளாண் இடுபொ ருட்களையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் மதகுபட்டி பைரவர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள கடனுதவி வழங்கப்பட்டது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மானாமதுரையில் புனித குழந்தை தெரசாள் தேவாலய பெருவிழா கொடியேற்றம் நடந்தது.
    • வருகிற 30-ந்தேதி ரத பவனி நடைபெறுகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் புனித குழந்தை தெரசாள் தேவாலயம் உள்ளது. இங்கு திருப்பணிகள் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டு திருப்பீடம் அர்ச்சிப்பு விழா மற்றும் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    புதிய திருப்பீடம் அர்ச்சிப்பு விழாவில் சிவகங்கை மறை மாவட்ட ஆயர் (பொறுப்பு) ஸ்டீபன் அந்தோணி கலந்து கொண்டு புதிய திருப் பீடத்தை திறந்து வைத்து அர்ச்சிப்பு செய்து வைத்தார்.குழந்தை தெரசாள் ஆலயத்தின் அருட்தந்தை பாஸ்டின் மற்றும் மறை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான அருட் பணியா ளர்கள், பங்கு இறைமக்கள் விழாவில் கலந்து கொண்ட னர்.

    முன்னதாக இந்த ஆலயத்தின் 84 -ம் ஆண்டு பெருவிழா தொடக்கமாக கொடியேற்றம் நடை பெற்றது. புனித குழந்தை தெரசாள் உருவம் தாங்கிய கொடியை ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் ஆயர் ஸ்டீபன் அந்தோணி ஏற்றி வைத்தார்.

    தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் பங்கு இறை மக்கள் சார்பில் வெவ்வேறு தலைப்புகளில் மறையுரை நிகழ்த்தப்பட்டு திருப்பலி நிறைவேற்றப்படும்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக புனித குழந்தை தெரசாள் சொரூ பம் தாங்கிய மின்விளக்கு ரத பவனி வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது. மறுநாள் அக்டோபர் 1-ந் தேதி நற்கருணை பவனியு டன் இந்த ஆண்டு திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடு களை புனித குழந்தை தெரசாள் ஆலய அருட்தந்தை பாஸ்டின், பங்கு இறை மக்கள், அருட் சகோதரிகள், பங்கு பேரவையினர் செய்துள்ளனர்

    • புனித குழந்தை தெரசாள் தேவாலய பெருவிழா கொடியேற்றம் நடந்தது.
    • இறை மக்கள், அருட் சகோதரிகள், பங்கு பேரவையினர் செய்துள்ளனர்

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் புனித குழந்தை தெரசாள் தேவாலயம் உள்ளது. இங்கு திருப்பணிகள் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டு திருப்பீடம் அர்ச்சிப்பு விழா மற்றும் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    புதிய திருப்பீடம் அர்ச்சிப்பு விழாவில் சிவகங்கை மறை மாவட்ட ஆயர் (பொறுப்பு) ஸ்டீபன் அந்தோணி கலந்து கொண்டு புதிய திருப் பீடத்தை திறந்து வைத்து அர்ச்சிப்பு செய்து வைத்தார்.குழந்தை தெரசாள் ஆலயத்தின் அருட்தந்தை பாஸ்டின் மற்றும் மறை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான அருட் பணியா ளர்கள், பங்கு இறைமக்கள் விழாவில் கலந்து கொண்ட னர்.

    முன்னதாக இந்த ஆலயத்தின் 84 -ம் ஆண்டு பெருவிழா தொடக்கமாக கொடியேற்றம் நடை பெற்றது. புனித குழந்தை தெரசாள் உருவம் தாங்கிய கொடியை ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் ஆயர் ஸ்டீபன் அந்தோணி ஏற்றி வைத்தார்.

    தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் பங்கு இறை மக்கள் சார்பில் வெவ்வேறு தலைப்புகளில் மறையுரை நிகழ்த்தப்பட்டு திருப்பலி நிறைவேற்றப்படும்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக புனித குழந்தை தெரசாள் சொரூ பம் தாங்கிய மின்விளக்கு ரத பவனி வருகிற 30-ந் தேதி நடைபெறுகிறது. மறுநாள் அக்டோபர் 1-ந் தேதி நற்கருணை பவனியு டன் இந்த ஆண்டு திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடு களை புனித குழந்தை தெரசாள் ஆலய அருட்தந்தை பாஸ்டின், பங்கு இறை மக்கள், அருட் சகோதரிகள், பங்கு பேரவை யினர் செய்துள்ளனர்

    • சிக்ரி ஆய்வகத்தை இலவசமாக பார்வையிடலாம் என்று அதிகாரி கூறினார்.
    • 04565-241470, 241502, 241355, 99945 14582 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    காரைக்குடி

    காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆய்வகம் சிக்ரியை பார்வை யிட பொது மக்களுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) இலவச அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

    இதுகுறித்து சிக்ரி இயக்குநர் கேரமேஷா கூறியதாவது:-

    மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் கீழ், மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக் குழுமம் சி.எஸ்.ஐ.ஆர் இயங்கி வருகிறது. அதன் காட்டுப்பாட்டின் கீழ், காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வுக் கழகம் சிக்ரி உட்பட நாடு முழுவதும் 37 ஆராய்ச்சி நிறுவனங்கள்உள்ளன.

    சி.எஸ்.ஐ.ஆர். செப் 26-ந் தேதி தொடங்கப்பட்டது.இந்த நாள் நிறுவன நாளாக கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு, காரைக்குடி சிக்ரியில் பார்வையாளர்கள் தினம் கடைப் பிடிக்கப்படுகிறது. நாளை (26-ந் தேதி) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பொது மக்கள், மாணவர்கள் சிக்ரி கண்டு பிடிப்புகளை இலவசமாக பார்வை யிடலாம்.

    அதில் உலோக அரி மானம் தடுப்பு, காரிய அமில மின்கலம், லித்தியம் மின்கலம், துத்தநாக புரோமின் மின்கலம், தொழிற்சாலைக்கு உபயோ கமான ரசாயனங்கள், தூய நிலையான ஆற்றல், மின்வேதியியல் உணரிகள்.நானோ மின் வேதியியல் போன்ற பல்வேறு துறைகளில் கண்டு பிடிக்கப்பட்ட ஆராய்ச்சி களின் மாதிரிகள் இடம் பெற்றிருக்கும். மேலும் செயல் விளக்கமும் இருக்கும்.

    இதுதவிர எதிர்காலத்தில் எரிசக்தியை பூர்த்தி செய்யும் வகையில், நீரிலிருந்து தயாரிக்கப்படும் பசுமை எரிசக்தி ஹைட்ரஜன் காட்சிப்படுத்தப்படும். பார்வையாளர்களுக்கு காரைக்குடி பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையத்திலிருந்து பஸ் வசதி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    சிக்ரி வளாகத்தில் உணவு கிடைக்கவும், அவசர கால மருத்துவ சிகிச்சை பிரிவும் ஏற்பாடு செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு 04565-241470, 241502, 241355, 99945 14582 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×