search icon
என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடந்தது.
    • கேப்டன் பாண்டியன், கேப்டன்முத்த, பழனிவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

    திருப்பத்தூர்

    தமிழகம் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் கடந்த 25-ந் தேதி முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்,தே.மு.தி.க. கட்சி நிறுவனருமான விஜய காந்தின் 71-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    அதன்அடிப்படையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பிரபாகர் காலனியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் உள்ள மாண வர்களுக்கு பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் உறவு கள் மற்றும் புதிய சகாப்தம் வாட்ஸ் அப் குழு இணைந்து காலை உணவு மற்றும் நோட்டு புத்தகம் உபகர ணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் திருவேங்கடம் தலைமையில் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து நாட்டார் மங்கலம் அரசு பள்ளியில் கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாநில வழக்கறிஞர் அணி பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் துரை பாஸ்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணா கண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் தனசேகரன், பைசூர் ரகுமான், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பழனிவேல், திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் ஜாபர் அலி, நகர செயலாளர் மாதவன், சிங்கம்புணரி செயலாளர்களான சிவகுமார்.

    பாண்டி, ராக்கெட் ராஜா, கேப்டன் குமார், நாச்சியார்புரம் குமார், மருதங்குடி கணேஷ்பாபு, கல்லல் ஒன்றிய பொறுப்பா ளர் நேதாஜி பிரபாகர், கிருஷ்ணன், பிள்ளை யார்பட்டி சரவணன், முத்துப்பாண்டி, பாலு, பழனிவேல், ரமணாராமு, முருகேசன், மாவட்ட ஒன்றிய நகர் கிளைக் கழக நிர்வாகிகள் உடனி ருந்தனர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளை திருப்பத்தூர் ஒன்றிய நிர்வாகிக ளான கேப்டன் பாண்டியன், கேப்டன்முத்த, பழனிவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பள்ளி மாணவ-மாணவிகள் 22,985 பேருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது.
    • கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை பெற்று பயன் பெறலாம்.

    காரைக்குடி

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் கும்பகோணம் லிமிடெட் காரைக்குடி மண்டலத்திற்கு உட்பட்ட சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கட்டண மில்லா பயணம் செய்வதற்கு ஏதுவாக சிவ கங்கை மாவட்டத்தில் 13,061 மாணவ, மாணவி களுக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 9,924 மாணவ, மாணவி களுக்கும் மொத்தம் 22,985 மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வடிவிலான கட்டணமில்லா பேருந்து அட்டைகள் வழங்கப்பட்டது.

    சிவகங்கை மாவட்டம் மன்னர் மேல்நிலைப் பள்ளி யில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் மாணவ மாணவி களுக்கு கட்டணமில்லா பேருந்து அட்டைகளை வழங்கினார். ஏனைய பள்ளிகளில் காரைக்குடி மண்டலத்தில் உள்ள 2 கோட்ட மேலாளர்கள், 11 கிளை மேலாளர்கள் மூலம் பள்ளி மாணவ, மாணவி களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டது.

    மேலும் இது நாள் வரை கட்டணமில்லா பேருந்து பயண அட்டைக்கு விண் ணப்பிக்காத மாணவ, மாணவிகள் உடனடியாக விண்ணப்பித்து கட்டண மில்லா பேருந்து பயண அட்டைகளை பெற்று பயன் பெறுமாறு மாணவ, மாணவிகளுக்கு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    • இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தற்காலிக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
    • மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை யின் கீழ் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை மாண வர்கள் நலன் கருதி தற்காலி கமாக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

    அதன் படி சிவகங்கை மாவட்டம் மல்லல் ஆதிதிரா விடர் நல தொடக்கப்பள்ளி யில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம்-1, உஞ்சனை ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம்-2 மற்றும் அதிகரம் உயர்நிலைப்பள்ளி யில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம்-2 (ஆங்கிலம்-1,அறிவியல்-1) என மொத்தம் 5 பணியிடங் கள் நிரப்பப்பட உள்ளது.

    மேற்கண்ட காலி பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனை அடிப்படையி லும் நிரப்பப்பட உள்ளது. இந்த காலிப்பணியிடங்க ளுக்கான ஊதியம் இடை நிலை ஆசிரியருக்கு ரூ.12 ஆயிரம் மற்றும் பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.15 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.

    பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நிரப்பப்படும் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியி டத்திற்கான கல்வித்தகுதி ஆசிரியர்களுக்கான தற்போதைய அரசு நடை முறையில் உள்ள விதிமுறை களை பின்பற்றி அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

    மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்கள், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார் வளர்களாக இருப்பவர்கள் வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதியுடன் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி யிடத்திற்கு பட்டியலி னத்தவருக்கும், பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்க ளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

    இந்த தற்காலிக பணி நியமனம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை பணிக்கு தெரிவு செய்யப்படும் நாள் முதல் ஏப்ரல் 2024 வரை மட்டுமே ஆகும். விண்ணப் பிக்க விரும்புவோர் சிவ கங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப் பத்தினை உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் வருகிற 4-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    • அரசின் திட்டங்கள் விவசாயிகளுக்கு முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
    • பங்கேற்ற விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

    கூட்டத்தில் கலெக்டர் ஆஷா அஜித் பேசியதா வது:-

    விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், புதிய கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி, சிவகங்கை மாவட்டத்திலுள்ள நீர் நிலையிலுள்ள ஆக்கிர மிப்புக்களை உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாத்தி டவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தினை பாதுகாத்திடவும், விவசா யிகளின் கோரிக்கை களுக்கிணங்க, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    விவசாயிகள் அரசின் திட்டங்களின் பயன்களை முழுமையாக பெற்றிடவும், தேவையான சான்றிதழ்களை வழங்கிடவும், துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும், நில அளவைத்துறை யினர் விவசாயிகள் கோரும் அளவீட்டுப்பணியினை விரைந்து மேற்கொள்ளவும், விவசாயிகளுக்கான மின் விநியோகங்களை சீரான முறையில் வழங்கிடவும், தேவையான உரங்களை இருப்பு வைத்திடவும், கண்மாய்களில் உள்ள மடைகள், தடுப்புச்சுவர்கள் பழுதடைந்து இருப்பின் விரைந்து சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

    மேலும் புதிய தடுப்பணைகள் கட்டித்தரவும், வங்கிகளின் மூலம் கடனுதவிகள் வழங்கி வேளாண் சார்ந்த புதிய தொழில் தொடங்கிட உறுதுணையாக இருந்திடவும், கடனுக்குரிய மானியத்தொகை யினை தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வழங்கிட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து கலெக்டர் திட்ட விளக்க கையேட்டினை வெளியிட்டார். இதில் பால்துரை (தேவகோட்டை), மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் ரவிச்சந்தி ரன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜினு, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தனபாலன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சர்மிளா மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.=

    • மாவட்ட அளவிலான நாடகப்போட்டியில் தேவகோட்டை அரசு பள்ளி முதலிடம் பிடித்தது.
    • தொடர்ந்து 5 ஆண்டுகளாக மாவட்ட அளவில் முதல் இடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    தேவகோட்டை

    சிவகங்கை வருவாய் மாவட்ட அளவிலான நாடகப்போட்டி காளையார்கோவில் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் தேவகோட்டை அருகே உள்ள புளியால் அரசு உயர்நிலைப் பள்ளி சிவகங்கை வருவாய் மாவட்ட அளவில் முதல் இடம்பெற்றது.வெற்றி பெற்ற மாணவர்கள் 9-ம் வகுப்பைச் சார்ந்த எட்வின், பிரியதர்சினி, ஹரிணி, தீபிகா, லில்லிஷிரி மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் ஆகியோரை இப்பள்ளி தலைமையாசிரியர் நாகேந்திரன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜோசப், ஆசிரியைகள், அலுவலர்கள் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தனர்.

    இவர்களுக்கு முதல் பரிசு ரூபாய் 1500 மற்றும் பள்ளியின் சார்பில் பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.இவர்கள் அனைவரும் அடுத்த மாதம் கோயம்புத்தூரில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். இப்பள்ளி தொடர்ந்து 5 ஆண்டுகளாக மாவட்ட அளவில் முதல் இடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • போதையில் இளம்பெண்ணிடம் போலீஸ்காரர் அத்துமீறி நடந்துள்ளார்.
    • போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் அந்த காவலர் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் கோர்பச்சேவ். இவர் இதற்கு முன்பு பணியாற்றிய இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் தேவ கோட்டை டவுன் போலீஸ் நிலையத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.

    நேற்று மதுபோதையில் சீருடை அணிந்து காவலர் பணிக்கு சென்றுள்ளார். இரவு 8 மணியளவில் பஸ் நிலையம் அருகே அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு இளம் பெண் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்த பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் காவலர் பின் தொடர்ந்து சென்றார். ஒத்தக்கடை ஆற்றுப்பாலம் அருகே இருள் சூழ்ந்த பகுதியில் சென்ற போது திடீரென காவலர் அந்தப் பெண்ணை வழிமறித்துள்ளார். ஏன் ஹெல்மெட் போட வில்லை? என போதையில் உளறியபடி அந்த பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயன்றுள்ளார்.

    அந்த பெண் கூச்சலிட்டதால் அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் காவலரை சிறைபிடித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். டவுன் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களின் பிடியிலிருந்த காவலரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    இதுகுறித்து தகவலறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் அந்த காவலர் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    • வேம்பத்தூர் வாராகி பீடத்தில் பவுர்ணமி சிறப்பு யாகம் நடந்தது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வேம்பத்தூரில் வாராகி அம்மன், ஆனந்தவள்ளி அம்மன் ஆகியோருக்கு பாமாலை மற்றும் கீர்தனைகள் பாடிய கவிராஜபண்டிதர் மற்றும் வாராகி அம்மன் பீடம் உள்ளது. இங்கு ஆவணி மாத பவுர்ணமி தினத்தில் சிறப்பு யாகம் வழிபாடு பூஜை நடைபெற்றது. இதில் விஜயன்சாஸ்திரி சிறப்பு பூஜை செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

    • ஜாகிர் உசேன் கல்லூரி மாணவர்க்கு பாராட்டு விழா நடந்தது.
    • ஆசிரியர் காஜா நஜ்முதீன் ஆகியோர் பரிசு மற் றும் சான்றி தழ் வழங்கி பாராட்டினர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடில் உள்ள டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியில் 3-ம் ஆண்டு வணிகவியல் பயிலும் மாணவர் விஜயகுமார், சிவகங்கை மாவட்ட அளவில் நடைபெற்ற ரெட் மாரத்தான் போட்டியில் 10-வது இடம் பெற அவருக்கு ரொக்க பரிசும் பெற்றார். மேலும் காரைக்குடி, கிரீடா பாரதி சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான மாரத்தான் போட்டியில் 15-வது இடம் பெற்றார். இந்த 2 போட்டிகளிலும் ரொக்க பரிசு பெற்று வெற்றி பெற்ற மாணவரை கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாஹ்கான் மற்றும் கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் ஆகியோர் வாழ்த்தினர். உடன் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் காளிதாசன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் காஜா நஜ்முதீன் ஆகியோர் பரிசு மற் றும் சான்றி தழ் வழங்கி பாராட்டினர்.

    • சிவகங்கை வார சந்தையில் முத்திரையிடாத எடையளவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சென்னை, தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் IAS மற்றும் சென்னை, சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி லெட்சுமிகாந்தன் ஆணையின்படியும் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் யாஸ்மின்பேகம் மற்றும் அவர்களின் மதுரை, தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரம ணியன் ஆலோசனையின் பேரில், சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அம லாக்கம்) முத்து தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர் வேலாயுதம், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் வசந்தி, மகாலெட்சுமி முத்திரை ஆய்வாளர் மாரியப்பன் ஆகியோர் பொதுமக்கள் நலன் கருதி சிவகங்கை நகர் வாரச்சந்தையில் சட்டமுறை எடையளவுச்சட்டம் மற்றும் அதன் விதிகளின் கீழ் சிறப்பு கூட்டாய்வு மேற்கொண்டனர்.

    இக்கூட்டாய்வில் முத்திரையிடப்படாத மின்னனு தராசுகள்-23, மேஜை தராசு-11, விட்டத்தராசு-12, இரும்பு எடைகற்கள்-54, ஊ.அளவைகள் - 2 மற்றும் தரப்படுத்தப்படாத எடையளவுகள்-2 ஆக மொத்தம் 104 எடைய ளவைகள் பொதுப்பறிமுதல் செய்யப்பட்டன.

    முன்னதாக 25.08.2023 அன்று புளியடிதம்பம் மீன் மார்க்கெட்டில் கூட்டாய்வு மேற்கொண்டபோது, முத்திரையிடப்படாத மின்னனு தராசுகள்-7, மேஜை தராசு-2, விட்டத்தராசு - 10, இரும்பு எடைகற்கள்-10 ஆக மொத்தம் 29 எடைய ளவைகள் பொதுப்பறிமுதல் செய்யப்பட்டன.

    முத்திரையிடப்படாமல் எடையளவுகள் பயன்படுத்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் எடையளவுகளை முத்திரையிட்டு பயன்படுத்துமாறும், மின்னனு தராசுகள் வருடத்திற்கு ஒரு முறையும், விட்டத்தராசுகள் மற்றும் படிக்கற்கள் இரண்டு வருடத்திற்கு ஒருமுறையும் முத்திரையிட்டும், அதன் சான்றிதழை உடன் வைத்திருக்குமாறும், மேலும் பொட்டலப் பொருட்களில் பொருளின் பெயர், பொருளின் நிகர எடை, அதிகபட்ச சில்லரை விற்பனை விலை, தயாரிப்பாளர் முழு முகவரி, நுகர்வோர் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் ஆகிய சான்றுரைகள் இடம் பெற்றிருக்க வேண்டும், இல்லையெனில் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வணிகர்களை கேட்டுக்கொண்டார்.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தெரிவித்துள்ளார்.

    • புதிய அங்கன்வாடி கட்டிடத்தை தமிழரசி எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
    • அங்கன்வாடி பணியாளர்கள், மின்வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வாகுடி ஊராட்சி புதிய அங்கன்வாடி கட்டிடம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி யில் இருந்து கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் மாயாண்டிச்சாமி அணைவரையும் வரவேற் றார். இந்த புதிய கட்டிடத்தில் அதிநவீன வசதிகளும் செய் யப்பட்டுள்ளது. இதேபோல் அதே பகுதியல் மின் தட்டுப்பாட்டை போக்க அதிக திறன் கொண்ட புதிய மின்மாற்றியை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்து இயக்கி வைத்தார்.இந்த விழாவில் ஒன்றிய குழுத்தலைவர் லதா, ஒன் றிய செயலாளர் அண்ணா துரை, ஊராட்சி துணை தலைவர் முத்தையா, வாகுடி கிளை செயலாளர் வேலுசாமி, வாகுடி காலணி கிளை செயலாளர் ராஜேந் திரன், அன்னியேந்தல் கிளை செயலாளர் மணிகண் டன், ராஜகம்பீரம் ஊராட்சி மன்ற தலைவர் முஜிப் ரகு மான், மேல பசலை ஊராட்சி மன்ற தலைவர் சிந்துஜா, மாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முருகவள்ளி தேசிங்குராஜா, மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், மின்வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கூட்டுறவு வங்கி விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • பொது மேலாளர்கள் காளைலிங்கம், விஜயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், மதுரை சரக வருமான வரி அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. வங்கி பொது மேலாளர் மாரிச்சாமி வரவேற்றார். வங்கி அலுவலர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்கள், செயலாட்சியர்கள் கலந்து கொண்டனர். முகாமில் வருமானவரி பிடித்தம் செய்வது குறித்து வருமான வரித்துறை துணை ஆணையாளர் மதுசூதன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர், செயலாட்சியர் ரவிசந்திரன் ஆகியோர் பேசினர். உதவி பொது மேலாளர்கள் காளைலிங்கம், விஜயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நேஷனல் அகாடமியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
    • மாணவி களுக்கு அத்தப்பூ கோல போட்டியும் அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சி களும் நடைபெற்றது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நேஷனல் அகாடமி சமுதாய கல்லூரி யில் ஒணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபாகர் தலைமை வகித் தார். கல்லூரி ஆசிரியர்கள் மது, மோனிஷா, சாந்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சதக் கத்துல்லா வரவேற்றார். ஒணம் பண்டிகையொட்டி கல்லூரியில் மாணவி களுக்கு அத்தப்பூ கோல போட்டியும் அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சி களும் நடைபெற்றது.

    இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கபட்டன. முடிவில் ஆசிரியர் பூவிழி நன்றி கூறினார்.

    ×