search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி உடற் தகுதி தேர்வின் போது காவல்துறையினருக்கு உதவியவர்களுக்கு எஸ்.பி. பாராட்டு
    X

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் எஸ்.பி. பாலாஜி சரவணன் பாராட்டு சான்றிதழ் வழங்கிய காட்சி.

    தூத்துக்குடி உடற் தகுதி தேர்வின் போது காவல்துறையினருக்கு உதவியவர்களுக்கு எஸ்.பி. பாராட்டு

    • உடல் திறனாய்வு தேர்வு தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்றது.
    • காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உடற்கல்வி ஆசிரியர்களை பாராட்டினார்.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த நவம்பர் மாதம் நடந்தது.இதில் தேர்ச்சி பெற்று தகுதியான விண்ணப்பதாரர்கள் 931 பேருக்கு உடற் தகுதி தேர்வு மற்றும் உடல் திறனாய்வு தேர்வு கடந்த 6-ந் தேதி முதல் நேற்று.வரை தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்றது.

    இதில் உடற் தகுதி தேர்வு மற்றும் உடற் திறனாய்வு தேர்வின் போது காவல்துறையினருக்கு உறுதுணையாக பணியாற்றிய மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் உட்பட உடற்கல்வி ஆசிரியர்கள் 20 பேருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்,காவல் துணை கண்காணிப்பா ளர்கள் மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு கல்பனா,தூத்துக்குடி . சத்தியராஜ், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு சம்பத், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஜெயராஜ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×