search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கனிமவள கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலெக்டரிடம் மனு
    X

    கனிமவள கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலெக்டரிடம் மனு

    • தடுப்பணை கட்டும் பணியை நிறுத்த வேண்டும்.
    • போதை பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவை,

    கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி வேலுமணி எம்எல்.ஏ தலைமையில் 9 எம்.எல்.ஏக்கள் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியை சந்தித்து மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் கனிம வளங்கள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை போதைப் பொருள் விற்பனை எப்போதும் இல்லாத வகையில் தற்போது அதிகரித்து வருகிறது இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சட்ட ஒழுங்கு பாதுகாத்தல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கேரளா அரசு கட்டி வரும் தடுப்பணையால் கோவை ஈரோடு திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பாசன பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படும் கோவை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தடுப்பணை கட்டும் பணியை நிறுத்த வேண்டும்.

    கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய உயர் மட்ட மேம்பால பணிகள், குடிநீர் திட்ட பணிகள், சாலை பணிகள், சீர்மிகு நகர திட்ட பணிகள், மக்களின் முக்கிய அடிப்படை வசதிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், வாழை விவசாயிகளுக்கு இழப்பீடு உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    அவருடன் அ.தி.மு.க.தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ., அம்மன் கே. அர்ச்சுணன் எம்.எல்.ஏ., அமைப்புச் செயலாளர்கள் செ.தாமோதரன் எம்.எல்.ஏ., ஏ.கே. செல்வராஜ் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் விபி.கந்தசாமி எம்.எல்.ஏ., இளைஞரணி துணைச் செயலாளர் டி.கே.அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ., மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் கே.ஆர். ஜெயராம் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன் ஆகியோர் வந்திருந்தனர்.

    Next Story
    ×