என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
போக்சோ வழக்கு குறித்து விசாரிக்க தனி நீதிமன்றம்
- நீதிமன்ற தொடக்க விழாவிற்கு தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி கலந்து கொண்டார்.
- நீதிபதிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்தனர்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் தடங்கம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு குற்றவியல் நடுவர் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம் முதல் அனைத்தும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளகத்திலே செயல்பட்டு வருகிறது.
தற்போது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக பல்வேறு சட்ட முன்னெடுப்பு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக சென்னை உயர்நீதி மன்றத்தின் பரிந்துரையின் பேரில், தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் போக்சோ வழக்குகளை விசா ரிப்பதற்காக தனி நீதிமன்றம் தொடங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிறப்பு போக்சோ நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த போக்சோ சிறப்பு நீதிமன்ற தொடக்க விழாவிற்கு தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி கலந்து கொண்டார். முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி சிறப்பு நீதிமன்றத்தினை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் நீதிபதிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி வைத்தனர்.சையத் பர்கத்துல்லா போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
போக்சோ வழக்கு களுக்கான சிறப்பு நீதிமன்ற தொடக்க விழாவில் குடும்ப நல நீதிபதி, மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாய சிறப்பு நீதிபதி, தலைமை குற்றவியல் நடுவர் மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க தலைவர், செய லாளர், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.