search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முருகன் கோவிலில் சிறப்பு பூஜை
    X

    போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூர் முருகன் கோவிலில் நேற்று நடைபெற்ற ஆடி கிருத்திகை திருவிழாவில் பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.

    முருகன் கோவிலில் சிறப்பு பூஜை

    • சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • அருள் பெற்ற பக்தர்களின் தலையில் கோவில் பூசாரி தேங்காய் உடைத்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூர் முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து மாரியம்மன் கோவில் முன் வீரபத்திர சுவாமி பக்தர்கள் சேவையாட்டம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் தங்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்தினர். தலையில் தேங்காய் உடைத்து சிதறும்போது பக்தர்களின் துன்பங்கள் யாவும் சிதறிப்போகும் என்பது நம்பிக்கை.

    இதற்காக தலையில் தேங்காய் உடைக்கப்படும் பக்தர்கள் ஆடி மாதம் 1-ம் தேதி முதல் விரதமிருந்து வருகின்றனர்.

    அருள் பெற்ற பக்தர்களின் தலையில் கோவில் பூசாரி தேங்காய் உடைத்தார். தேங்காய் உடைக்கப்படும் நிகழ்வை காண சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.

    Next Story
    ×