search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோவை வழியாக தாம்பரம்- மங்களூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
    X

    கோவை வழியாக தாம்பரம்- மங்களூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

    • அக்டோபர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படும்.
    • அக்டோபர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமைகளில்) மங்களூரில் இருந்து நண்பகல் 12 மணிக்குப் புறப்படும்.

    கோவை,

    சென்னை தாம்பரம்-மங்களூர் இடையே கோவை வழித்தடத்தில் சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதாெடர்பாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ரெயில் பயணிகளின் சிரமங்களை கருத்தில் கொண்டு, சென்னை தாம்பரம்-மங்களூர் இடையே கோவை வழித்தடத்தில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    அதன்படி, அக்டோபர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமைகளில்) தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படும் தாம்பரம்-மங்களூர் சிறப்பு ரெயில் (எண் 06049) மறுநாள் காலை 7.30 மணிக்கு மங்களூரைச் சென்றடையும்.

    இதேபோல், அக்டோபர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமைகளில்) மங்களூரில் இருந்து நண்பகல் 12 மணிக்குப் புறப்படும் மங்களூர்-தாம்பரம் சிறப்பு ரெயில் (எண்.06050) மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.

    இந்த ரெயிலானது, காசர்கோடு, பையனூர். கண்ணூர், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூர், ஷொரனூர், ஒட்டப்பாலம், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், எழும்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×