search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குத்துக்கல்வலசை செயின் மேரீஸ் பள்ளியில் தமிழ் ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி
    X

    மாணவர்களுக்கான 55 பக்க புத்தகத்தை கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்ட போது எடுத்தபடம்.

    குத்துக்கல்வலசை செயின் மேரீஸ் பள்ளியில் தமிழ் ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி

    • வட்டார வாரியாக 152 தமிழ் ஆசிரியர்களுக்கும் பொறுப்பு தமிழ் ஆசிரியர்கள் 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • அனைத்து மாணவர்களையும் தமிழில் எழுத மற்றும் படிக்க வைக்க தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை செயின் மேரீஸ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் தமிழ் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி மற்றும் பயிற்சி கட்டகம் வெயிடுதல் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரக்கூடிய மாணவ- மாணவிகளில் தமிழ் எழுத, வாசிக்க தெரியாத மாணவர்களுக்காக மாவட்ட கலெக்டர் தலைமையிலும், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முன்னிலையிலும் ஒவ்வொரு பள்ளியிலிருந்து ஒருங்கிணைப்பு தமிழ் ஆசிரியர்கள் மொத்தம் 152 பேர் வரவழைக்கப்பட்டு ஒவ்வொரு வட்டாரம் வாரியாக இந்த 152 தமிழ் ஆசிரியர்களுக்கும் பொறுப்பு தமிழ் ஆசிரியர்கள் 11 பேர் நியமிக்கப்பட்டு இவர்களின் செயல்பாடுகளை கவனிக்க 29 தலைமை ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    நிகழ்ச்சியில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு 55 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை மாவட்ட கலெக்டர் வெளியிட்டார்.தொடர்ந்து மாவட்டம் முழுமையும் ஒரே மாதிரியாக இந்த மாணவர்களுக்கு நடத்தப்பட்டு மாதம் இருமுறை இந்த மாணவர்களுக்கு தேர்வும் நடத்தி அனைத்து மாணவர்களையும் தமிழில் எழுத மற்றும் படிக்க வைக்க தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. இவை அனைத்தையும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அனைவரும் ஒவ்வொரு பள்ளியாக சென்று ஆய்வு செய்து மாதம் 2 முறை அறிக்கைகள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முத்தையா அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×