search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தசரா மற்றும் சஷ்டி விழா காலங்களில் திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும்-  அதிகாரியிடம் கோரிக்கை
    X

    ரெயில்வே அதிகாரியிடம் மனு வழங்கிய போது எடுத்த படம்.

    தசரா மற்றும் சஷ்டி விழா காலங்களில் திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும்- அதிகாரியிடம் கோரிக்கை

    • குலசேகரன்பட்டினம் தசரா விழா மைசூருக்கு அடுத்தபடியாக பிரமாண்டமாக நடக்கக் கூடியது
    • குலசேகரன்பட்டினத்தில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் பல்வேறு இடங்களில் இருந்து கூடுவார்கள்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி ரெயில் நிலைய அபிவிருத்தி குழு ஒருங்கிணைப்பாளர் தங்கமணி, அ.தி.மு.க. முன்னாள் நகரச் செயலாளர் அமிர்தராஜ், கோவில்பட்டி நகர த.மா.கா. தலைவர் ராஜகோபால் ஆகியோர் மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் அனந்துவை நேரில் சந்தித்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் நடைபெறும் தசரா விழா இந்திய அளவில் மைசூருக்கு அடுத்தபடியாக பிரமாண்டமாக நடக்கக் கூடியது. விழாவின் 10-வது நாளான 5- ந் தேதி குலசேகரன்பட்டினத்தில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் பல்வேறு இடங்களில் இருந்து கூடுவார்கள்.

    எனவே இவர்களின் வசதியை கருத்தில் கொண்டு வரக்கூடிய 4-ந் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கும், 6-ந் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கும் கூடுதல் எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க வேண்டும்.

    இதே போல் 5-ந் தேதி மதியம் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கும், 6-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கும் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும்.

    மேலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி மற்றும் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு அக்டோபர் மாதம் 29-ந்தேதி இரவில் சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு, 30 மற்றும் 31- ந்தேதி மாலையில் திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 30-ந்தேதி மதியம் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயிலும் இயக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×