search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சித்ரா பவுர்ணமியையொட்டி தருமபுரி கோவில்களில் சிறப்பு வழிபாடு
    X

    குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ துர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    சித்ரா பவுர்ணமியையொட்டி தருமபுரி கோவில்களில் சிறப்பு வழிபாடு

    • அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
    • விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி பகுதியில் உள்ள கோவில்களில் சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அந்தந்த கோவில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

    தருமபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் சித்ரா பவுர்ணமி சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தருமபுரி நெசவாளர் நகர் மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோன்று தருமபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவ னேஸ்வரர் கோவில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள பிரகதாம்பாள் உடனாகிய அருளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    இதேபோன்று தருமபுரி நெசவாளர் நகர் ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ வேல்முருகன் கோவில் சித்ரா பவுர்ணமி விழாவை யொட்டி ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

    அப்போது பக்தர்கள் அழகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்ததும் அங்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தருமபுரி குமார சாமிப் பேட்டை சிவசுப்பிர மணியசாமி கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவிலில் நடைபெற்ற சித்ரா பவுர்ணமி விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடை பெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்

    இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

    Next Story
    ×