search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி வெள்ளியை முன்னிட்டு திண்டுக்கல் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
    X

    கோட்டை மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்.

    ஆடி வெள்ளியை முன்னிட்டு திண்டுக்கல் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

    • ஆடி மாதம் முதல் வெள்ளியை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள பல்ேவறு கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • திண்டுக்கல் பூமார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் அதிகரித்தது.

    திண்டுக்கல்:

    ஆடி மாதம் முதல் வெள்ளியை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள பல்ேவறு கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடத்தப்பட்டு மகாதீபாராதணை நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் ஊற்றபட்டது. கடந்த வருடம் கொரோனா ஊரடங்கால் கோவில்கள் அைடக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வருடம் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதபோல திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலிலும் சிறப்பு பூைஜ நடைபெற்றது. பண்ணாரி அம்மன் கோவில், வழி துணை மாரியம்மன் கோவில், ஆர். எம்.காலனி வெக்காளியம்மன், ஒய்.எம்.ஆர்.பட்டி காளியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வெக்காளியம்மன் ேகாவிலில் காளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன் அலங்காரத்தில் வடிவமை க்கப்பட்டு வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தது.

    ஆடி வெள்ளியை முன்னிட்டு திண்டுக்கல் பூமார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. ஒரு கிலோ மல்லிகை ரூ.1000-த்துக்கு விற்கப்பட்டது. முல்லை ரூ.300, கனகாம்பரம் ரூ.200, ஜாதிப்பூ ரூ.400, செவ்வந்தி ரூ.130, சம்பங்கி ரூ.60, அரளி ரூ.50, கோழிக்கொண்ைட ரூ.30, செண்டுமல்லி ரூ.30, ரோஜா ரூ.70 என்ற விலையில் விற்பனையானது.

    Next Story
    ×