என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கல்வராயன்மலையில் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு திறன்வளர் பயிற்சி கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்
- கல்வராயன்மலையில் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு திறன்வளர் பயிற்சி கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.
- 142 பழங்குடியின மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியம் வெள்ளிமலை அரசு ஏகலைவா மாதிரி ஆண்கள் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு திறன்வளர் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாமினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது, பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு திறன்வளர் பயிற்சி முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த பயிற்சி முகாமில் குண்டு எறிதல், தட்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், 100 மீ, 200 மீ, 400 மீ, கபாடி மற்றும் வாலிபால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முகாமில் திறன்மிக்க விளையாட்டு பயிற்சி ஆசிரியர்கள் 10 நாட்களுக்கு மாணவ,மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர். இதில் 142 பழங்குடியின மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர்.
முகாமின் முக்கிய நோக்கமே மாணவர்களின் விளையாட்டுத்திறன்களை உடற்பயிற்சி ஆசிரியர்கள் வெளிக்கொணர்ந்து மாநில, தேசிய மற்றும் உலகளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்திடும் வகையில் இப்பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பழங்குடியின மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டுகளிலும் தங்களுடைய திறன்களை வளர்த்துக்கொள்ள பயிற்சி முகாம் உறுதுணையாக இருக்கும் என கூறினார்.அப்போது திட்ட அலுவலர் (பழங்குடியினர் நலம்) இளங்கோ,கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலர் சிவராமன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பாலாஜி, கல்வராயன்மலை வருவாய் வட்டாட்சியர் அசோக், கல்வராயன்மலை ஒன்றியக்குழு பெருந்தலைவர் சந்திரன், வெள்ளிமலை ஒன்றியக்குழு உறுப்பினர் அண்ணாமலை, வெள்ளிமலை ஊராட்சிமன்ற தலைவர் இரத்தினம் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.