search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து இலங்கைக்கு படகில் தப்பிய 9 பேர் கைது
    X

    மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து இலங்கைக்கு படகில் தப்பிய 9 பேர் கைது

    • முகாமை சுற்றிலும் உள்ள பல்வேறு இடங்களில் கூலி வேலை செய்து வருகிறார்கள்.
    • இலங்கை கடற்படை முகாமில் வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    மண்டபம்:

    இலங்கையில் 1983-ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக அங்கிருந்த தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வர தொடங்கினர். அவர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

    அதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் சுமார் 450 குடும்பங்களை சேர்ந்த இலங்கை தமிழர்கள் தங்கியுள்ளனர். அவர்களின் குடும்ப தேவைக்காகவும், வாழ்வாதாரம் காக்கவும் முகாமை சுற்றிலும் உள்ள பல்வேறு இடங்களில் கூலி வேலை செய்து வருகிறார்கள்.

    சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகத்திற்கு இலங்கை தமிழர்கள் ஏராளமானோர் அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். இதுவரை தமிழகத்திற்கு அவ்வாறு வந்த சுமார் 290 பேர் கைது செய்யப்படாமல், மனிதாபிமான அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் இலங்கையில் பொருளாதார தடை காலத்திற்கு பிறகு கடந்த 10.4.2022 அன்று தமிழகம் வந்து மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கி இருந்த இலங்கை திரிகோணமலையை சேர்ந்த நிரோஷன் என்ற தீபன் (வயது 25), சுதா என்ற கீதா (38), விதுஸ்திகா (13), அஜய் (12), அபிநயா (2), ஞான ஜோதி (46), ஜித்து (12), மகேந்திரன் (50), பூபேந்திரன் (54)ஆகியோர் இலங்கை செல்ல திட்டமிட்டனர்.

    இதற்காக நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து சொந்தமாக படகு ஒன்றை விலைக்கு வாங்கி நேற்று பிற்பகல் மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து இலங்கை நோக்கி சென்றனர். அப்போது இலங்கை கடற்படை இரவு 9 மணியளவில் நெடுந்தீவு அருகே அவர்களை கைது செய்தது. அதைத்தொடர்ந்து இலங்கை கடற்படை முகாமில் வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×