search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வி தரத்தை உயர்த்த  நடவடிக்கை - புதிதாக பொறுப்பேற்ற முதன்மை கல்வி அதிகாரி பேட்டி
    X

    பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கை- புதிதாக பொறுப்பேற்ற முதன்மை கல்வி அதிகாரி பேட்டி 

    கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கை - புதிதாக பொறுப்பேற்ற முதன்மை கல்வி அதிகாரி பேட்டி

    • முதல் நாளே அருகிலுள்ள பள்ளிகளுக்கு சென்று, பள்ளி செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டார்.
    • ஆசிரியர்களை சந்தித்து, கவனம் செலுத்த வேண்டிவை குறித்து ஆராய உள்ளார்.

    திருப்பூர்,

    திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக திருவளர்ச்செல்வி பொறுப்பேற்றார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராக(சி.இ.ஓ.,) பணியாற்றிய திருவளர்ச்செல்வி திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார்.

    முதல் நாளே அருகிலுள்ள பள்ளிகளுக்கு சென்று, பள்ளி செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டார்.திருப்பூர் மாவட்ட குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

    கொரோனா பாதிப்புக்கு பிறகு பள்ளிகளில் இடைநிற்றல் அதிகம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வில் பல மாணவர்கள் பங்கேற்கவில்லை. திருப்பூரில் பொதுத்தேர்வை3பிரிவுகளிலும் சேர்த்து, 86 ஆயிரத்து 37 மாணவர்கள் பதிவு செய்ததில், 4,947 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. இதுவரை இவ்வளவு மாணவர்கள் பொதுத்தேர்வில் 'ஆப்சென்ட்' ஆனதில்லை.

    இவர்களை கண்டறிந்து, உடனடி தனித்தேர்வில் பங்கேற்க வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொழில் நகரமான திருப்பூரில் விடுபட்ட மற்றும் தொடர் விடுமுறையில் உள்ள மாணவர்களை கண்டறிவதில் சிக்கல்கள் நீடிக்கிறது. முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி கூறுகையில், ''கடந்த, 2009ல் தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்வி அதிகாரியாக (டி.இ.ஓ.,) ஆக பணியில் சேர்ந்தேன். பின் 2011ல் கோவை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சி.இ.ஓ., ஆக பதவி உயர்வு கிடைத்தது. தொடர்ந்து வேலூர், காஞ்சிபுரத்தில் பணியாற்றி திருப்பூர் வந்தடைந்துள்ளேன். இங்கே கல்விநிலை குறித்து நிறைய ஆய்வுசெய்ய வேண்டி உள்ளது. கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களை சந்தித்து, கவனம் செலுத்த வேண்டிவை குறித்து ஆராய உள்ளேன். மாநில முதலிடத்தை தக்க வைக்கவும், கல்வி தரத்தை தொடர்ந்து அதிகரிக்கவும் ஆவன செய்வேன் என்றார்.

    Next Story
    ×