என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை- லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் எச்சரிக்கை
- லஞ்சம் வாங்கியதாக ஆதாரங்களுடன் புகார் பெறப்பட்டால் 10 நாட்களுக்குள் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
- எழுத்துப்பூர்வ புகார்கள் கிடைக்கப்பெற்றால் அதை அதிகாரிகளிடம் உடனே சமர்பிக்க வேண்டும்.
சென்னை:
மின் இணைப்பு பெறுவதற்கு லஞ்சம் கொடுப்பது வழக்கத்தில் உள்ளது. இணைப்பு கொடுப்பதற்கு எத்தனை ஊழியர்கள் வருகிறார்களோ அவர்களுக்கும் சேர்த்து பணம் கொடுக்க வேண்டும்.
இந்த நிலையை மாற்ற அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதையொட்டி லஞ்ச ஒழிப்பு இயக்குனர் வன்னிய பெருமாள் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-
மின்சார வாரிய சேவை இணைப்புகளை வழங்குவதற்கு ஒரு சில அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் கேட்பதும் வாங்குவதும் வழக்கத்தில் உள்ளதாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு புகார் வந்துள்ளது.
இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். லஞ்சம் வாங்கியதாக ஆதாரங்களுடன் புகார் பெறப்பட்டால் 10 நாட்களுக்குள் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எழுத்துப்பூர்வ புகார்கள் கிடைக்கப்பெற்றால் அதை அதிகாரிகளிடம் உடனே சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.