search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி மாவட்ட சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள்  புதிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு
    X

    தருமபுரி மாவட்ட சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் புதிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

    • ரூ.2.00 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
    • பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 31.01.2023- க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    தருமபுரி,

    தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீ்ர்மரபினர் இன மாணவ, மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவியருக்கு ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2.00 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

    மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2022-23 ம் கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவா்கள் கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்டுத்த ப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவ லர்களை அணுகியோ அல்லது http://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes என்ற இணையதள முகவரி யிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மேற்படி கல்வி உதவித்தொகை விண்ணப்பித்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதி யான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து கீழ்கண்ட முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 31.01.2023- க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    அனுப்பவேண்டிய முகவரி:- ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்புக் கட்டடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை 5.தொலைபேசி எண் 044-29515942.மின்னஞ்சல் முகவரி tngovtiitscholarship@gmail.com. இவ்வாறு கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×