என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
8 கிலோ மீட்டர் தூரத்துக்கு தினமும் நடந்து செல்லும் மாணவர்கள்
- தங்களது வீட்டில் இருந்து காலை 7.30 மணிக்குள் புறப்பட வேண்டியுள்ளது.
- பிரார்த்த னை கூட்டத்தில் மயங்கி விழுகின்ற அவல நிலையும் அடிக்கடி ஏற்படுகிறது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே போளையம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மாராப்பநாயக்கன்பட்டி, போளையம்பள்ளி, பொம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமவாசிகளுக்கு பிரதான தொழில் விவசாயம், காய்கறி, பூ, கீரை போன்றவை இங்கு பயிரிடப்பட்டு உள்ளன.
இந்த கிராமங்களில் இருந்து, பள்ளிகளிலும், கல்லுாரிகளிலும் படிக்கும் மாணவ - மாணவியர், பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் இப்பகுதிகளில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கோபிநாதம்பட்டி பகுதியை அடைந்த பிறகு அங்கிருந்து தான் அரூர், மொரப்பூர், தருமபுரி பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.
குறிப்பாக மாணவ, மாணவிகள், பள்ளி, கல்லுாரி செல்ல, கோபிநாத ம்பட்டி கூட்டு ரோடு பகுதிகளுக்கு தான் செல்ல வேண்டி உள்ளது. இப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த 11 மற்றும் 12 வகுப்பு படிக்கக் கூடிய மாணவ மாணவிகள் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆர்.கோபிநாதம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தினமும் நடந்தே சென்று படித்து வருவதால் தங்களது வீட்டில் இருந்து காலை 7.30 மணிக்குள் புறப்பட வேண்டியுள்ளது.
சில வீடுகளில் காலையில் உணவு சமைப்பதற்கு காலத்தாமதம் ஆவதால் மாணவ, மாணவிகள் சாப்பிடாமலே பள்ளிக்கு நடந்து சென்று காலையில் நடைபெறுகின்ற பிரார்த்த னை கூட்டத்தில் மயங்கி விழுகின்ற அவல நிலையும் அடிக்கடி ஏற்படுகிறது.
அதே போல, விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்களில் ஈடுபடுவோர், கட்டுமான தொழிலாளர்கள், முதியோர் என, கிராமங்களில் இருந்து ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளும், இளை ஞர்களும், வெளியூருக்குச் சென்று வேலை செய்து வீடு திரும்புவோரும் அதிகள வில் உள்ளனர்.
மேலும் இந்த சாலையில் உள்ள மின்கம்பங்களில் மின்வி ளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் வரும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு நவலை, சின்னாக வுண்டம்பட்டி, பொம்பட்டி, போளையம்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து கோபிநாதம்பட்டி வழியாக தருமபுரி செல்லும் வகையில் காலை, மாலை இருவேளைகளில் அரசு பேருந்து ஒன்றை இயக்க ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் புகார் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை எனப் பகுதி கிராம மக்களும், பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
பெண்களுக்கும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியருக்கும் இலவச பேருந்து என அறிவித்து விட்டு இந்த வழித்தடத்தில் பேருந்து இயக்கினால் இழப்பு ஏற்படுவதாகக் கூறி ஏற்கனவே இயக்கப்பட்ட பேருந்தை நிறுத்தியதாக புகார் தெரிவிக்கின்றனர்.
சில நாட்களில் பொது தேர்வு நடைபெற உள்ளதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பள்ளி மாணவர்களும் , பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்