search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுசீந்திரம் கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றம்!
    X

    சுசீந்திரம் கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றம்!

    • ஆவணி திருவிழா 10 நாட்கள் நடப்பது வழக்கம்.
    • ஆவணி திருவிழா மட்டும் திருமாலுக்காக நடத்தப்படுகிறது.

    சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் மார்கழி பெருந்திருவிழா, சித்திரை தெப்பத்திருவிழா, மாசி திருக்கல்யாண விழா மற்றும் ஆவணி திருவிழா ஆகியவை 10 நாட்கள் நடப்பது வழக்கம். இதில் ஆவணி திருவிழா மட்டும் திருமாலுக்காக நடத்தப்படுகிறது.

    அந்த வகையில் இன்று காலை சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி சந்நதியின் அருகிலுள்ள திருவேங்கடவிண்ணவரம் பெருமாள் சந்நதியின் எதிரிலுள்ள கொடி மரத்தில் திருக்கொடியேற்றப்பட்டது. விழா நாட்களில் தினமும் வாகனபவனி, சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    ஒன்பதாம் நாள் விழா அன்று தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் காலையில் ஆராட்டு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தேவஸம் போர்டு செய்து வருகிறது.

    Next Story
    ×