search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காயல்பட்டினம் பள்ளியில் கோடைகால பயிற்சி முகாம் - 60 மாணவர்கள் பங்கேற்பு
    X

    முகாமில் பங்கேற்ற மாணவருக்கு ஆதவா அறக்கட்டளை நிறுவனர் பாலகுமரேசன் சான்றிதழ் வழங்கிய போது எடுத்த படம்.

    காயல்பட்டினம் பள்ளியில் கோடைகால பயிற்சி முகாம் - 60 மாணவர்கள் பங்கேற்பு

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா மற்றும் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
    • 4 முதல் 8 -ம் வகுப்பு படிக்கும் 60 மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் தீவு தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு பள்ளியின் கல்வித்துறை இல்லம் தேடி கல்வி மற்றும் வானவில் மன்றம் சார்பில் ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா மற்றும் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.

    மாவட்ட தொடக்க கல்வி உதவி திட்ட அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகராட்சி துணை தலைவர் சுல்தான் லெப்பை முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி வரவேற்று பேசினார். திருச்செந்தூர் ஆசிரியர் பயிற்றுநர் நபில் புகாரி தொடக்க உரை நிகழ்த்தினார். காயல்பட்டினம் நகராட்சி வார்டு கவுன்சிலர் தஸ்னவிஸ் ராணி, ஆசிரிய பயிற்றுநர்கள் ஜெகதீஸ் பெருமாள், மேடையாண்டி, ஆறுமுகநேரி ஆதவா தொண்டு நிறுவனர் பாலகுமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி ஆசிரியர்கள் ஜானகி, ஆனந்தி, புவனா மற்றும் சுலைகா ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் வானவில் மன்ற பயிற்சியாளர் பரிபூரண ஸ்டெல்லா, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் ரஹ்மத் மஸ்கூரா ஆகியோர் 4 முதல் 8 -ம் வகுப்பு படிக்கும் 60 மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. முடிவில் உதவி ஆசிரியை தனபாய் நன்றி கூறினார்.

    Next Story
    ×