என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தமிழக அரசின் சாதனை விளக்க கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிடும் பொது மக்கள்
- 428 பயனாளிகளுக்கு, 2.96 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்க ப்பட்டது.
- ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் உணவு திருவிழாவும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
திருப்பூர் :
தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கண்காட்சி, திருப்பூர் மத்திய பஸ் நடைபெற்று வருகிறது.
கண்காட்சி
திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ஏற்பாடு செய்துள்ள கண்காட்சியில், தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் போட்டோக்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன், 428 பயனாளிகளுக்கு, 2.96 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்க ப்பட்டது. கலெக்டர் வினீத் தலைமையில் நடந்த விழாவில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், கண்காட்சியை துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், கமிஷனர் கிராந்திகுமார், திட்ட இயக்குனர் லட்சுமணன், தனிதுணை கலெக்டர் அம்பாயிரநாதன், போலீஸ் உதவி கமிஷனர் கார்த்திகேயன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் கோவிந்த சாமி, கோவிந்தராஜ், பத்மநாபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உணவு திருவிழா- கலைநிகழ்ச்சிகள்
வருவாய்த்துறை, பட்டு வளர்ச்சித்துறை, மகளிர் திட்டம், 'தாட்கோ' திட்டம், தொழிலாளர் நலவாரியம் சார்பில் நல உதவி வழங்கப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் உணவு திருவிழாவும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில், 23ம் தேதி வரை, மத்திய பஸ் ஸ்டாண்டில் நடக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.