search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் பெற்றோர் கண்டிப்பு: 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
    X

    தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் பெற்றோர் கண்டிப்பு: 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

    • சரியாக படிப்பு வராத ஷபீனா சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் இருந்த எலி பேஸ்ட் (விஷம்) தின்று உள்ளார். மறுநாள் காலையில் ஷபீனா தொடர்ச்சியாக வாந்தி எடுத்தார்.
    • இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கள்ளுக்கடைமேடு ஜீவானந்தம் வீதியை சேர்ந்தவர் பசீர்அகமது. இவரது மகள் ஷபீனா (16). இவர் கருங்கல்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    பள்ளியில் நடந்த தேர்வில் மாணவி ஷபீனா மதிப்பெண் குறைவாக பெற்றிருந்தார். இதையடுத்து அவரது பெற்றோர் ஷபீனாவை அடிக்கடி டி.வி. பார்க்காதே என்று கண்டித்தும், நன்றாக படி என்றும் அறிவுரை கூறி வந்தனர்.

    சரியாக படிப்பு வராத ஷபீனா சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் இருந்த எலி பேஸ்ட் (விஷம்) தின்று உள்ளார். மறுநாள் காலையில் ஷபீனா தொடர்ச்சியாக வாந்தி எடுத்தார். இதையடுத்து அவரது பெற்றோர் மாணவியிடம் கேட்டபோது தான் எலி பேஸ்ட் விஷத்தை சாப்பிட்டு விட்டதாக தெரிவித்தார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக ஷபீனாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணவி திடீரென இறந்து விட்டார்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஈரோட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×