search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவில் பகுதியில் 2 கோவில்களில் உண்டியலை உடைத்து கொள்ளை
    X

    சங்கரன்கோவில் பகுதியில் 2 கோவில்களில் உண்டியலை உடைத்து கொள்ளை

    • சங்கரன்கோவில் அருகே உள்ள உசிலங்குளம் கிராமத்தில் உள்ள உச்சி உடையார் அய்யனார் கோவில் உள்ளது.
    • நேற்று முன்தினம் அந்த கோவிலில் பூஜைகளை முடித்துவிட்டு தர்மகர்த்தா வேலுச்சாமி வழக்கம் போல கோவில் கதவை அடைத்து விட்டு சென்றுள்ளார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செவல் குளத்தில் ரேணுகா தேவி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை சீனிவாசன் என்பவர் நிர்வகித்து வருகின்றார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல கோவிலை அடைத்து விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சவுந்தரராஜன் என்பவர் நேற்று கோவிலின் வளாகத்திற்கு உள்ளே சென்று பார்த்த போது அலுவலக கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து சீனிவாசனுக்கு தகவல் அளித்தார். இதில் 40 கிராம் வெள்ளி கொடி, 2 கிராம் தங்கம் மாங்கல்யம், சில்வர் உண்டியல் மற்றும் சி.சி.டி.வி. காட்சிகளை பதிவு செய்யும் எந்திரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து குருவிகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல சங்கரன்கோவில் அருகே உள்ள உசிலங்குளம் கிராமத்தில் உள்ள உச்சி உடையார் அய்யனார் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் அந்த கோவிலில் பூஜைகளை முடித்துவிட்டு தர்மகர்த்தா வேலுச்சாமி வழக்கம் போல கோவில் கதவை அடைத்து விட்டு சென்றுள்ளார்.

    நேற்று அங்கிருந்த உண்டியல் மற்றும் சி.சி.டி.வி. காட்சி பதிவு செய்யும் எந்திரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அய்யாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில் மற்றும் கடைகள், அலுவலகங்கள் பாதுகாப்பிற்காக போலீசார் சி.சி.டி.வி .கேமரா பொருத்தப்பட வேண்டும் என வலியுறுத்தும் சூழ்நிலையில் சி.சி.டி.வி. காட்சிப்பதிவு எந்திரத்தையே கொள்ளையர்கள் கொள்ளை அடித்து சென்றிருப்பது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×