என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விளாத்திகுளம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 250 ஆடுகள் பத்திரமாக மீட்பு
- சக்திவேல் தனது 250 ஆடுகளுடன் இரவு முழுவதும் கண்மாய் பகுதியிலேயே தவித்து வந்துள்ளார்.
- விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
விளாத்திகுளம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வடமலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் நூற்றுக்கணக்கான ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை சக்திவேல் விளாத்திகுளம் அருகே உள்ள மாவிலோடை கிராமத்தில் உள்ள பெரிய கண்மாய் பகுதியில் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அதிகமான மழை பெய்ததால், கண்மாயில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் சக்திவேல் தனது 250 ஆடுகளுடன் இரவு முழுவதும் கண்மாய் பகுதியிலேயே தவித்து வந்துள்ளார்.
இதைப்பார்த்த மாவிலோடை கிராமத்தை சேர்ந்த மக்கள், இதுகுறித்து உடனடியாக விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் கிராம மக்கள், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த சக்திவேலையும், 250 ஆடுகளையும் பத்திரமாக மீட்டனர்.