search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருஞ்சாணியில் 58 மி.மீ மழை- திற்பரப்பில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
    X

    பெருஞ்சாணியில் 58 மி.மீ மழை- திற்பரப்பில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

    • பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.13 அடியாக இருந்தது. அணைக்கு 1171 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 227 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70.40 அடியாக உள்ளது. அணைக்கு 888 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் 4-வது நாளாக மழை நீடித்தது. பேச்சிப்பாறை பெருஞ்சாணி சிற்றாறு அணை பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பெருஞ்சாணியில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. அங்கு அதிகபட்சமாக 58 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை கொட்டி வருவதால் பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி வருவதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணிநேரமும் அணையை கண்காணித்து வருகிறார்கள்.

    குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து விடப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியிலும் சாரல் மழை பெய்து வருகிறது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.13 அடியாக இருந்தது. அணைக்கு 1171 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 227 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70.40 அடியாக உள்ளது. அணைக்கு 888 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 160 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 12.10 அடியாகவும் சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 12.20 அடியாகவும் பொய்கை அணை நீர்மட்டம் 17 அடியாகவும் மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 37.89 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.50 அடியாக உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 29, பெருஞ்சாணி 58, சிற்றார்-1-25.4, சிற்றார்-2-24.8, பூதப்பாண்டி 18.6, களியல் 4.4, குழித்துறை 8.4, நாகர்கோவில் 4.8, புத்தன் அணை-54.8, சுருளோடு 42.8, தக்கலை 15.1, குளச்சல் 6, இரணியல் 9.2, பாலமோர் 14.2 மாம்பழத் துறையாறு-21 ஆரல்வாய்மொழி 2 கோழி போர்வைவிளை 9.6 ஆணை கிடங்கு 194 முக்கடல் 30.2 குருந்தன்கோடு 9.4.

    Next Story
    ×