என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தருமபுரி மாவட்டத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் பலியாகினர்: சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்
- லோகேஷ் மற்றும் பீமாராவ் இருவரும் தப்பி வெளியில் வந்துள்ளனர்.
- அரூர் அடுத்த டி.அம்மாபேட்டையை சேர்ந்த 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
அரூர்:
தருமபுரி மாவட்டம் அரூர் டி.அம்மாபேட்டை சேர்ந்த இளைஞர்கள் 25க்கும் மேற்பட்டோர், ஓசூர், கர்நாடக பகுதிகளில் உள்ள பட்டாசு குடோன்களில் வேலை செய்வதற்காக சென்று உள்ளனர். இதில் 15 இளைஞர்கள் ஒரு பகுதிக்கு சென்றுள்ளனர். இதில் 10 இளைஞர்கள் தமிழ்நாடு- கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு குடோனில் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று பட்டாசு குடோனுக்கு தேவையான பட்டாசுகள் கன்டெய்னர் லாரி மூலம் வந்துள்ளது. இதனை இறக்கும் பணியில் குடோனில் வேலை செய்த 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ முழுவதுமாக பரவி குடோனில் இருந்த பட்டாசுகள் முழுவதும் வெடித்து சிதறியது.
அப்போது வெளியில் வேலை செய்திருந்த லோகேஷ் மற்றும் பீமாராவ் இருவரும் தப்பி வெளியில் வந்துள்ளனர். ஆனால் குடோனுக்குள்ளாக இருந்த மற்றவர்கள் விபத்தில் சிக்கினர். இந்த நிலையில் இந்த விபத்தில் இதுவரை 14 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இதில் தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த டி.அம்மாபேட்டையை சேர்ந்த 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். ஒரே கிராமத்தைச் சார்ந்த வேடப்பன், இளம்பரிதி, ஆதிக்கேசவன், விஜயராகவன், ஆகாஷ், கிரி, முனிவேல் உள்ளிட்ட 7 வாலிபர்கள் உயிரிழந்தனர். இதனால் டி.அம்மாபேட்டை கிராமம் முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது. மேலும் இறந்தவர்களின் வீட்டு அருகே உறவினர்கள் சூழ்ந்து கதறி அழுதனர். இந்த காட்சி பார்ப்பவர்கள் நெஞ்சை உருக்கும் நிலையில் இருந்தது. மேலும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 7 இளைஞர்கள் பட்டாசு வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் இந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.