search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர் தவறி விழுந்து மரணம்
    X

    பலியான மாணவர் பிரபாகரன்


    மதுரையில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர் தவறி விழுந்து மரணம்

    • பஸ் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள கண் ஆஸ்பத்திரி அருகே திரும்பியது.
    • பஸ் பள்ளத்தி்ல் இறங்கி சென்றதால் நிலைகுலைந்த பிரபாகரன், அரசு பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    மதுரை:

    மதுரை விளாங்குடி, முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனசேகரன். இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களது மகன் பிரபாகரன் (வயது 14). இவர் ஆரப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் பிரபாகரன் இன்று காலை பள்ளிக்கூடம் செல்வதற்காக அரசு பஸ்சில் சென்றார். அப்போது பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் உள்ளே செல்ல முடியாததால் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி சென்றார்.

    அந்த பஸ் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள கண் ஆஸ்பத்திரி அருகே திரும்பியது. அப்போது பஸ் பள்ளத்தி்ல் இறங்கி சென்றதால் நிலைகுலைந்த பிரபாகரன், அரசு பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலை கல்லில் மோதி படுகாயம் ஏற்பட்டது. இதனை கண்ட பயணிகள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

    இது தொடர்பாக மதுரை மாநகர போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பற்றி அறிந்த மாணவரின் பெற்றோர் காலையில் மகிழ்ச்சியாக புறப்பட்டு சென்ற மாணவர் பஸ்சில் இடம் கிடைக்காமல் தொங்கி கொண்டு சென்றதில் பலியாகி விட்டானே என்று கதறி அழுதனர்.

    மேலும் மாணவர்கள் பாதுகாப்பில் போக்குவரத்துறை மற்றும் போலீசார் உரிய கவனம் செலுத்தாததே இது போன்ற விபத்துக்களுக்கு காரணம் என்று பலியான மாணவனின் உறவினர்கள் தெரிவித்தனர்.

    மதுரை மாநகரில் போக்குவரத்து போலீசார் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி மாணவர்களிடம் பஸ்சில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செல்லக்கூடாது என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் விளாங்குடி 9-ம் வகுப்பு மாணவன் பிரபாகரன் பஸ்சில் தொங்கி சென்றபோது விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×