என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இளங்கோவன் அமைதிப்படை அமாவாசை போன்றவர்- நடிகை விந்தியா கடும் தாக்கு
- எதற்காக தி.மு.க. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு இடம் விட்டு கொடுத்தது என்றால் தமிழக முழுவதும் தி.மு.க.விற்கு எதிராக எதிர்ப்பலை உருவாகியுள்ளது.
- ஆளும் கட்சியினர் இடைத்தேர்தலில் தோற்றால் பெரிய அவமானம் என்பதால் காங்கிரசுக்கு ஒதுக்கி பலி ஆடு ஆக்கியுள்ளது.
ஈரோடு:
ஈரோட்டில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து நடிகை விந்தியா 2-வது நாளாக பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-
பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வந்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். தி.மு.க.வினர் பிரசாரத்தை உற்று பார்த்தால் அவர்கள் எப்போதுமே உண்மை பேச மாட்டார்கள் என்பது நன்றாக தெரியும்.
ஒட்டுமொத்த தி.மு.க. அமைச்சர்களும் ஈரோட்டில் உள்ளனர். இவர்களை தேர்தல் சமயத்தில் மட்டும் தான் பார்க்க முடியும். மற்ற நேரங்களில் அலுவலகத்தில் சென்றால் கூட அவர்களை பார்க்க முடியாது.
இளங்கோவன் எம்.எல்.ஏ.வானால் அவர் பொதுமக்களை திரும்பி கூட பார்க்க மாட்டார். அவர் அமைதிப்படை அமாவாசை மாதிரி பதவிக்காக மாறி மாறி பேசுவார். அவரது தாத்தா பெரியார் காங்கிரசை எதிர்த்தார். அவரது அப்பா சம்பத் தி.மு.க.வை எதிர்த்தார்.
ஆனால் இன்று அவரோ தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார். இளங்கோவன் இதற்கு முன்னாடி கருணாநிதி, ஸ்டாலினை திட்டி தீர்த்து உள்ளார். அது பற்றி ஒரு புத்தகமே போடலாம்.
இளங்கோவனை நம்பாதீர்கள். இதுதான் எனக்கு கடைசி தேர்தல். எனக்கு ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் என்று கூறி தேர்தலில் நின்று வருகிறார்.
எதற்காக தி.மு.க. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு இடம் விட்டு கொடுத்தது என்றால் தமிழக முழுவதும் தி.மு.க.விற்கு எதிராக எதிர்ப்பலை உருவாகியுள்ளது. ஆளும் கட்சியினர் இடைத்தேர்தலில் தோற்றால் பெரிய அவமானம் என்பதால் காங்கிரசுக்கு ஒதுக்கி பலி ஆடு ஆக்கியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.