search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பொதுச்செயலாளர் தேர்தல்- ஈபிஎஸ் பெயரில் 37 பேர் விருப்பமனு தாக்கல்
    X

    பொதுச்செயலாளர் தேர்தல்- ஈபிஎஸ் பெயரில் 37 பேர் விருப்பமனு தாக்கல்

    • விதிமுறைகளை பின்பற்றி விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம்.
    • பொதுச்செயலாளர் தேர்தலுக்கான முதல் நாளான இன்று 37 பேர் எடப்பாடி பழனிசாமி பெயரில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் இன்று முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விருப்ப மனுக்களை பெறலாம். நாளை பிற்பகல் 3 மணி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம். 20ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற விரும்புவோர் 21ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் திரும்ப பெறலாம்.

    மார்ச் 26ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 27ம் தேதி திங்கட்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும். பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் தலைமைக் கழகத்தில் கட்டணத் தொகை ரூ.25000 செலுத்தி விருப்ப மனு பெறலாம். விதிமுறைகளை பின்பற்றி விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான முதல் நாளான இன்று காலை 10 மணிக்கு வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. 11.15 மணிக்கு எடப்பாடி பழனிசாமி வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    பொதுச்செயலாளர் தேர்தலுக்கான முதல் நாளான இன்று 37 பேர் எடப்பாடி பழனிசாமி பெயரில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

    Next Story
    ×