search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் இருக்கை முன்பு அமர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டம்
    X

    காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் இருக்கை முன்பு அமர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டம்

    • தி.மு.க. - அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடைய கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • எதிர்கட்சி கவுன்சிலர்கள் மேயரின் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம் இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கூட்டம் தொடங்க தாமதமானது.

    கூட்டத்துக்கு மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.

    கூட்டம் தொடங்க தாமதமானதால் அ.தி.மு.க.,பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க் கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதற்கு பதிலடியாக தி.மு.க. உறுப்பினர்களும் எதிர்த்து கோஷமிட்டனர்.

    அப்போது தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் மணிப்பூர் சம்பந்தமான வீடியோவை மாமன்ற உறுப்பினர்கள் உள்ள வாட்ஸ்-அப் குழுவில் பதிவிட்டது ஏன்? என்று பெண்கவுன்சிலர் கேள்வி எழுப்பினார். இதனால் தி.மு.க. - அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடைய கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து எதிர்கட்சி கவுன்சிலர்கள் மேயரின் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர்.

    Next Story
    ×