என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கள்ளக்காதல் விவகாரத்தில் கட்டிட தொழிலாளிக்கு கத்திக்குத்து- மனைவியின் கள்ளக்காதலன் வெறிச்செயல்
- சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் தங்களது குழந்தைகளுடன் அன்னூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தனர்.
- புகாரின் பேரில் போலீசார் கள்ளக்காதலனுடன் இருந்த இளம்பெண்ணை அழைத்து விசாரணை நடத்தினர்.
கோவை:
திருச்சி காந்தி மார்க்கெட்டை சேர்ந்தவர் 32 வயது கட்டிட தொழிலாளி. இவர் தனது மனைவியுடன் திருப்பூர் பாண்டியன் நகரில் வசித்து வந்தார். அப்போது இவருக்கும் தஞ்சையைச் சேர்ந்த லோடுமேன் பாலாஜி (வயது 24) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது.
இவர் அடிக்கடி கட்டிட தொழிலாளியின் வீட்டிற்கு வந்து சென்றார். அப்போது கட்டிட தொழிலாளியின் மனைவிக்கும் பாலாஜிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. தனது கணவர் இல்லாத நேரத்தில் இளம்பெண் தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் கட்டிட தொழிலாளிக்கு தெரியவரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
பின்னர் இளம்பெண் தனது கணவரை பிரிந்து பாலாஜியுடன் சென்றார். 2 பேரும் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.
இது குறித்து கட்டிட தொழிலாளி திருப்பூர் பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் கள்ளக்காதலனுடன் இருந்த இளம்பெண்ணை அழைத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர். 2 பேரும் செஞ்சேரி பிரிவில் வசித்து வருகின்றனர்.
சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் தங்களது குழந்தைகளுடன் அன்னூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தனர். அப்போது பாலாஜி அங்கு வந்தார். அவர் இளம்பெண்ணை தன்னுடன் வருமாறு அழைத்தார். அப்போது கட்டிட தொழிலாளிக்கும், பாலாஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் மாறி, மாறி தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த பாலாஜி தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து கட்டிட தொழிலாளியின் தலையில் குத்தினார். இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பாலாஜியை மடக்கி பிடித்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கட்டிட தொழிலாளி, தாக்குதலில் காயம் அடைந்த பாலாஜி ஆகியோரை மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்